'எது ரொனால்டோ கையில சிம்கார்டு இருக்கா'... 'கிண்டலாக கலாய்த்த நெட்டிசன்'... சளைக்காமல் ஏர்டெல் கொடுத்த பதிலடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கிறிஸ்டியானோ ரொனால்டோ விவகாரத்தைத் தொடர்புப் படுத்தி Airtel-யை நெட்டிசன் ஒருவர் கலாய்த்த சம்பவம் ட்விட்டரில் நடந்துள்ளது.

'எது ரொனால்டோ கையில சிம்கார்டு இருக்கா'... 'கிண்டலாக கலாய்த்த நெட்டிசன்'... சளைக்காமல் ஏர்டெல் கொடுத்த பதிலடி!

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த உலகின் நட்சத்திர கால்பந்தாட்ட வீரராகத் திகழும் கிறிஸ்டியனோ ரொனால்டோ, நடைபெற்று வரும் UEFA EURO 2020 தொடரில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார். குரூப் F பிரிவில் ஹங்கேரி அணிக்கெதிரான ஆட்டத்துக்கு முன்னதாக வழக்கமான செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

Netizens makes fun of Airtel using ronaldo coca cola issue

இதில் போர்ச்சுகல் அணியின் கேப்டன் ரொனால்டோ கலந்து கொண்டு செய்தியாளர்களைச் சந்திப்பதற்காக மேடையில் அமர்ந்தார். அப்போது அவரின் எதிரில் மேஜை மீது இரண்டு கோகோ கோலா பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனைப் பார்த்த ரொனால்டோ, கோலா பாட்டில்கள் இரண்டையும் அப்புறப்படுத்தி விட்டு பக்கத்திலிருந்த தண்ணீர் பாட்டிலை மேலே உயர்த்திக் காட்டினார்.

‘அகுவா’ என தண்ணீருக்கான போர்த்துகீசிய வார்த்தையைக் கூறிய அவர், எல்லோரும் கோலாவுக்கு பதிலாகத் தண்ணீர் குடிக்க வேண்டுமெனச் சமிக்ஞை செய்தார். ரொனால்டோவின் இந்த செயல் உலகம் முழுவதும் வைரலானது. கோடிக்கணக்கானவர்கள் ரொனால்டோவின் இந்த வீடியோவை பகிர்ந்தனர். இந்த விவகாரம் அதோடு நிற்காமல் கோகோ கோலாவின் பங்கு வர்த்தகத்திலும் கடுமையாக எதிரொலித்தது.

இதனால் கோகோ கோலாவின் பங்குகள் 4 பில்லியன் அளவுக்கு அதாவது 1.6% சரிவை சந்தித்துள்ளது. (இந்திய மதிப்பில் சுமார் 30,000 கோடி ரூபாய்) இதனையடுத்து 242 பில்லியனாக இருந்த கோகோ கோலாவின் மொத்த பங்கு மதிப்பு, 238 பில்லியனாக சரிந்துள்ளது. இந்நிலையில் சாதாரணமாகவே ஒரு கண்டெண்ட் கிடைத்தாலே வச்சு செய்யும் நெட்டிசன்கள், இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து மீம்ஸ்களாக பறக்கவிட்டார்கள்.

அந்தவகையில் தற்போது ஏர்டெல் நெட்ஒர்க்கில் பெரிய அளவில் சிக்கல் இருப்பதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும் சமூகவலைத்தளங்களில் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனைக் கையில் எடுத்த நெட்டிசன் ஒருவர், ''எது.. ரொனால்டோ கையில எதோ சிம்கார்டு இருக்கா'' என ஏர்டெல் நிறுவனத்தைக் கிண்டல் செய்து மீம்ஸ் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். இது ட்விட்டரில் வைரலான நிலையில், இதற்கு ஏர்டெல் நிறுவனமும் பதிலளித்துள்ளது.

அதில், ''ஆம் ! அந்த தண்ணீர் பாட்டில் உடன்'' எனப் பதிவிட்டுள்ளது. இதனிடையே ரொனால்டோவை வைத்து நெட்டிசன்கள் ஏர்டெல் தொடர்பாகப் பல மீம்ஸ்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்