'17 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பயங்கரம்'... 'நெல்லையப்பர் கோவிலில் அனைத்து வாசல்களும் திறப்பு'... பின்னணியில் இருக்கும் காரணம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நெல்லையப்பர் கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்கு கோபுர வாசல்கள் மூடப்பட்டது. அந்த வழியாகப் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

தமிழகத்தின் பிரசித்திபெற்ற கோவில்களில் நெல்லை நெல்லையப்பர் கோவிலுக்குத் தனி இடம் எப்போதும் உண்டு. இதன் வடக்கு, தெற்கு, மேற்கு கோபுர வாசல்கள் கடந்த 17 ஆண்டுகளாகப் பூட்டியே கிடந்தது. இந்நிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, சமீபத்தில் நெல்லையப்பர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் சார்பில் கோவிலில் பூட்டிக்கிடக்கும் வாசல்களைத் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் அங்கு ஆய்வு நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவைத் தொடர்ந்து கோவிலின் மேற்கு, வடக்கு, தெற்கு வாசல்களில் உடனடியாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நேற்று வடக்கு, தெற்கு, மேற்கு வாசல் கதவுகள் திறக்கப்பட்டன. 3 வாசல் கதவுகளுக்கும் சிறப்புத் தீபாராதனை காண்பித்து கதவுகள் திறக்கப்பட்டன.

ஆனால் 17 ஆண்டுகளாக வடக்கு, தெற்கு, மேற்கு வாசல்கள் பூட்டி கிடந்ததற்குப் பின்னணியில் அதிர்ச்சி காரணம் ஒன்றும் உள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு நெல்லையப்பர் கோவில் வடக்குப்புற வாசல் அருகே ஒரு கொலை சம்பவம் அரங்கேறியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி அன்றிலிருந்து கோவிலின் வடக்கு, தெற்கு, மேற்கு கோபுர வாசல்கள் மூடப்பட்டது. அந்த வழியாகப் பக்தர்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு நெல்லையப்பர் கோவிலில் நான்கு வாசல் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் அந்த வழியாகச் சென்று சாமி தரிசனம் செய்தனர்.

மற்ற செய்திகள்