'தயிருக்கு ஜிஎஸ்டி வசூலித்த ஓட்டல்'... '15,000 ரூபாய் அபராதம் விதித்த நீதிமன்றம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தயிருக்கு ஜி.எஸ்.டி. மற்றும் பார்சல் தொகை வசூலித்த உணவகத்திற்கு நெல்லை நீதிமன்றம் 15,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நெல்லை மாவட்டம் தாழையத்து அருகே உள்ள தாராபுரத்தை சேர்ந்தவர் மகாராஜா. இவர், பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள தனியார் உணவகத்தில், 40 ரூபாய்க்கு தயிர் வாங்கியுள்ளார். இதற்கு 5 சதவிகித ஜி.எஸ்.டி.யாக 2 ரூபாய், பார்சல் செய்ய 2 ரூபாய் என, 4 ரூபாய் சேர்த்து 44 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. தயிர், பச்சை பால், பச்சை மாமிசம், காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்கள் ஜி.எஸ்.டி.க்குள் வராது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தயிருக்கு ஜிஎஸ்டி வசூலித்ததால் அதிர்ச்சியடைந்த மகாராஜா, நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றமத்தில், வணிகவரித் துறை அதிகாரியும் விசாரிக்கப்பட்டார். தயிருக்கு வரி கிடையாது. பார்சல் கவருக்கு கட்டணம் வாங்க கூடாது என உறுதியானது. இதையடுத்து நுகர்வோரின் மன உளைச்சலுக்கு 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவுக்கு 5,000 ரூபாய், ஜி.எஸ்.டி., கவர் ஆகியவற்றுக்கு வசூலித்த நான்கு ரூபாயையும் சேர்த்து, 15 ஆயிரத்து, நான்கு ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். தவறினால் 6 சதவிகித வட்டியும் வழங்க வேண்டும் என்று நீதிபதி தேவதாஸ் தீர்ப்பளித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஓடும் ரயிலில் இறங்க முயற்சி'... 'இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்'!
- 'காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி நேர்ந்த சோகம்'... ‘தலைகீழாக கார் கவிழ்ந்து 5 பேர் பலி’!
- 'முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி'.. சம்மந்தப்பட்ட '30 வருட வழக்கில்'.. பரபரப்பு தண்டனை!
- 'இனி இதுக்கெல்லாம் FIR தேவையில்ல.. தயவு தாட்சண்யமில்லாம அரஸ்ட் பண்ணுங்க'.. சுப்ரீம் கோர்ட் அதிரடி!
- 'மரண தருவாயில் நான் விரும்புவது இதுதான்'.. கோர்ட்டில் கைதி கேட்ட நெஞ்சை உருக்கும் கோரிக்கை!
- 'செல்லாது.. செல்லாது..' 2 வருஷத்துக்கு பின் ரயில்வேயிடம் இருந்து 33 ரூபாயை திரும்பப் பெற்ற இளைஞர்!
- 'ஒருத்தரும் உதவிக்கு வரல'... 'நடுரோட்டில் நடந்த கொடூரம்'... நெஞ்சை உலுக்கும் 'சிசிடிவி காட்சிகள்' !
- தமிழக நீட் தேர்வுக்கான 6 மையங்கள் திடீர் மாற்றம்.. எந்தெந்த மையங்கள் தெரியுமா?
- சூறைக்காற்றுடன் கூடிய கனமழை.. உயிரிழந்த வெளிநாட்டுப் பறவைகள்.. நெல்லையில் சோகம்!
- மைனர் பெண்ணின் மார்ஃபிங் படங்களை போஸ்ட் செய்த வாலிபர்.. மகிளா நீதிமன்றம் கொடுத்த தண்டனை!