“நான் கிரானைட் பிஸினஸ்மேன்.. சென்னை வெள்ளத்தில் நடுரோட்டுக்கு வந்துட்டேன்”.. காதல் மனைவியின் துணையோடு மீண்டும் சாதித்த கணவர்..! Neeya Naana
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி சமூக அளவில் அனைத்து தரப்பினரும் பார்க்கக்கூடிய மற்றும் அவர்களின் சிந்தனையை தூண்டக்கூடிய விவாத நிகழ்ச்சியாக பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வருகிறது. இதில் விவாதிக்கப்படும் பல டாபிக்குகள், பெரிய அளவில் சமூக வலைத்தளங்களில் கூட பேசு பொருளாக மாறும். மேலும் இந்த நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக பிரபல தொகுப்பாளர் கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார்.
நீயா நானா
இரு தரப்பிலான கருத்துகளையும் கேட்டுக் கொண்டு, அதில் சரியாக பாய்ண்ட்டுகளை எடுத்துரைத்து பேசுவதன் மூலம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருபவர் கோபிநாத். நீயா நானா நிகழ்ச்சி சில நேரம் கலகலப்பாகவும், சுவாரஸ்யம் கலந்தும் செல்லும். மறுபக்கம், தீப்பறக்கும் விவாதங்கள் கூட உருவாகி பார்ப்பவர்கள் பலரையும் கூட நிகழ்ச்சியுடன் ஒன்றி போக வைக்கும்.
அதே போல, சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகள் பற்றி ஒருபுறமும், அதே வேளையில் ஜாலியான டாபிக்குகளை கையில் எடுத்து அதனை சுற்றி நடைபெறும் விவாதங்களும் நீயா நானா நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.
வாழ்வில் உறுதுணையாக இருக்கும் காதல் திருமணம்
இந்நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் திருமணத்துக்கு பிறகு சேர்ந்து சந்தித்த போராட்டங்கள் குறித்து அந்தப் போராட்டங்களுக்கு இடையில் தங்களுடைய காதல் பார்ட்னர் எந்த அளவுக்கு தங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் பங்கேற்ற கணவர் ஒருவர் பேசும் பொழுது, “எங்கள் திருமணம் காதல் திருமணம். நான் கிரானைட் பிசினஸ் நடத்திக் கொண்டிருந்தேன். ஆனால் சென்னை வெள்ளத்தில் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு அனைத்தையும் இழந்தோம். நடுரோட்டுக்கு வந்த நிலைதான்.
அந்த சமயத்தில் பிசினஸ் அடி வாங்கி விட்டது. அதன் பிறகு என்னுடைய மனம் சோர்ந்து விட்டது. என் மனைவி ஊக்கம் கொடுத்தார் உறுதுணையாக இருப்பதாக கூறினார். வீட்டிலிருந்து இட்லி சுட்டு தருவார். நாங்கள் அதை ஆட்டோவில் எடுத்துச் சென்று அசோக் நகரில் ஒரு இடத்தில் டேபிள் போட்டு அந்த டேபிளில் உணவுகளை வைத்து விற்பனை செய்தோம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தள்ளுவண்டி கடை நடத்த ஆரம்பித்தோம். அதில் கூட்டம் அதிகமானது லாபம் கிடைத்தது. அதன் பிறகு தற்போது சிறிய அளவிலான ஹோட்டல் ஒன்றை அசோக் நகர்,சென்னையில் தொடங்கி இருக்கிறோம். ஒரு வருடமாக நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. என் மனைவி கற்பகம் தான் அதற்கு ஓனர். அவருடைய பெயரில் ஹோட்டல் நடத்திக் கொண்டிருக்கிறோம். முழுக்க முழுக்க அவருடைய உறுதுணை தான் இதற்கு காரணம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இது பற்றிய அவருடைய மனைவி கூறும் பொழுது , “சென்னை வெள்ளத்துக்கு பிறகு மிகப்பெரிய அடி. எங்கள் வீட்டில் அவ்வளவு பஞ்சம், பண பற்றாக்குறை. வீட்டில் சாப்பிட கூட எதுவும் இருக்காது. ஆனால் அவர் சோர்ந்து இருந்ததை பார்த்து என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மிகவும் கஷ்டமாக இருந்தது. அதனால் அவருக்கு உணவு சமைத்து கொடுத்து ஆட்டோவில் ஏற்றி அவருடன் அனுப்பிவிட்டு பிறகு நான் கிளம்பி செல்வேன். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இந்த கடையை நடத்தி கொண்டு வந்தோம்” என்று கூறினார். இவர்களின் வாழ்வை மிகவும் உருக்கமாக கேட்ட கோபிநாத் அவர்களின் ஹோட்டலுக்கு தானும் வந்து சென்றதாகவும் குறிப்பிட்டு நெகிழ வைத்தார்.
மற்ற செய்திகள்
நெருங்கிய தோழியை நிச்சயம் செய்து புகைப்படத்தை பகிர்ந்த கிரிக்கெட் வீராங்கனை.. வாழ்த்தும் ரசிகர்கள்!!
தொடர்புடைய செய்திகள்
- இளந்தாரி கறி விருந்து.. "கோழியா சேவலானு கறிய சாப்பிடும் போதே கண்டுபிடிக்கலாம்".. வேல. ராமமூர்த்தி EXCLUSIVE!
- உணவால் இறந்ததாக கருதிய உறவினர்கள்.. ஒரு மாதம் கழித்து விலகிய மர்மம்.. கண்ணீர் மல்க கதறிய கணவர்!!
- 'வாத்தி' விக்ரமன் மற்றும் ஷிவினின் உதவி.. 'வயிறார' வாழ்த்திய குழந்தைகள்.. நெகிழ வைக்கும் வீடியோ..!
- Dr.Sharmika : “தப்பு தான்.. மன்னிச்சிடுங்க.. அது ஹியூமன் எரர்.. நானும் மனுஷிதானே?”.. குலோப் ஜாமூன் சர்ச்சை குறித்து டாக்டர் ஷர்மிகா.!
- "பசங்க கைவிட்டுட்டாங்க".. ஆதரவற்ற பாட்டிக்கு இளைஞர் செய்த உதவி.. கண்கலங்கி அவங்க சொன்ன வார்த்தை.. வீடியோ..!
- ஆன்லைன்ல உணவு... ரூ.75,378 க்கு சிங்கிள் ஆர்டர்... மிரளவைத்த பெங்களூர்வாசி!
- அழைப்பு இல்லாத திருமண வீட்டிற்கு சாப்பிட போன MBA மாணவன்.. கண்டுபிடித்து கொடுத்த அதிர்ச்சி தண்டனை!!
- ஆன்லைன் கேமுக்கு அடிமையான வடமாநில பெண் தமிழகத்தில் மரணம்.!
- 'என் செல்லங்களா நல்லா சாப்பிடுங்க".. குழந்தைகளுக்கு ஆசை ஆசையாய் உணவு பரிமாறிய GP முத்து.. வைரலாகும் வீடியோ..!
- உணவளித்தவர் மரணம்... கையை பிடித்து முத்தமிட்டு தேம்பி தேம்பி அழுத குரங்கு - நெஞ்சை உலுக்கும் வீடியோ