'மருத்துவ படிப்பிற்கான NEET நுழைவு தேர்வில்...' தமிழக அமைச்சரவை 'அதிரடி முடிவு!’ - திடீர் 'அறிவிப்பிற்கு’ அனைத்து தரப்பினரும் பாராட்டு...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய அளவிலான நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திவரும் நிலையில், இந்தத் தேர்வால் பாதிக்கப்பட்டிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இது மிகுந்த வரவேற்புக்குரிய அறிவிப்பு ஆகும். ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அவசரச் சட்டத்தை இயற்றவும், அதை நடப்பு ஆண்டிலிருந்தே நடைமுறைப்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டில், மாநிலப் பாடத்திட்டத்தின்படி ஆண்டுதோறும் மேல்நிலைக் கல்வியை முடிக்கும் சுமார் 8 லட்சம் மாணவர்களில், கிட்டத்தட்ட மூன்றில் இரு பங்கினர் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.
ஆனால், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்த பிறகு கடந்த மூன்றாண்டுகளில் 14 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புக்கான வாய்ப்பைப் பெற்றார்கள். இதற்கு அர்த்தம் அரசுப் பள்ளி மாணவர்கள் திறனில் குறைந்தவர்கள் என்பது அல்ல; இதனை கருத்தில் கொண்டு, அரசு பள்ளி மாணவர்களின் நலனை கருதி தமிழக அமைச்சரவை 7.5% உள் இட ஒதுக்கீட்டை வழங்க முடிவு செய்துள்ளது.
புதிய இடஒதுக்கீட்டைப் பார்த்து, மேல்நிலைப் படிப்பின்போது மட்டும், தனியார் பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு மாற முற்படும் குறுக்கு வழி ஒரு நிபந்தனையின் வழி அடைக்கப்பட்டிருக்கிறது. ‘ஆறாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளியில் படித்த மாணவரே இந்த ஒதுக்கீட்டுக்குத் தகுதியானவர்’ ஆவர்.
2001- க்கு முன்பு வரை இருந்த மருத்துவப் படிப்பு உள்ளிட்ட தொழிற்கல்விப் படிப்புகளில் கிராமப்புற மாணவர்களுக்கான 15% இடஒதுக்கீட்டை 2001-ல் ஆட்சிக்கு வந்த முதல்வர் ஜெயலலிதா அதை 25% ஆக உயர்த்தினார். ஆனால், இந்த இடஒதுக்கீடு நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
தற்போது தமிழக அமைச்சரவை முடிவு செய்துள்ள இந்த புதிய இட ஒதுக்கீட்டினால், தங்கள் பிள்ளைகள் மருத்துவர்கள் ஆக வேண்டும் என கனவு காணும் பெற்றோர்கள், தனியார் பள்ளிகளை தவிர்த்து அரசு பள்ளிகளை நாடி வரும் சூழல் உருவாகும் என பலர் கருதுகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- தனியார் கம்பெனி 'வேலைவாய்ப்புகளில்' இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு! - தெறிக்கவிட்ட 'மாநில' அரசு!
- 'கரிசக்காட்டில் மீண்டும் மருத்துவக் கனவுகள் மலருமா!?'.. நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு!.. தமிழக அமைச்சரவை ஒப்புதல்!
- திருப்பதி ஏழுமலையான் கோவில்... பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!... தரிசனத்திற்கான முன்பதிவில் தேவஸ்தானம் அதிரடி!
- 'வணக்கம் டா மாப்ள!... நீட் தேர்வுக்கு படிக்கிறயா?.. நான் உனக்கு சொல்லி தரேன்!'... மாணவர்களை மிரளவைத்த கண்டுபிடிப்பு!... சென்னை பொறியாளரின் 'நிஜ' எந்திரன்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- 'இந்த வயசுலேயே இப்படி ஒரு மோசடியா'?...'வசமாக சிக்கிய அரசு டாக்டரின் மகன்'!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்..!
- ‘சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களுக்கான’.. ‘தீபாவளி சிறப்பு பேருந்துகள்’.. ‘டிக்கெட் முன்பதிவு தொடக்கம்’..