நீட் விவகாரம்.. ஆளுநர் என்ன போஸ்ட் மேனா? .. வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு மசோதாவை, ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

நீட் விவகாரம்.. ஆளுநர் என்ன போஸ்ட் மேனா? .. வானதி சீனிவாசன் பரபரப்பு குற்றச்சாட்டு
Advertising
>
Advertising

நீட் தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்த பிறகு தான், ஜனாபதியின் ஒப்புதலுக்காக அனுப்ப முடியும்.

தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தமிழகத்தின் கவர்னரான் ஆர்.என். ரவியை சந்தித்த முதல்வர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க வேண்டி, வலியுறுத்தியிருந்தார்.

திருப்பி அனுப்பிய ஆளுநர்

ஆனால், தொடர்ந்து நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதா ஆளுநரின் பரிசீலனையில் தான் இருந்து வந்தது. இந்நிலையில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரிய தமிழக அரசின் சட்ட மசோதா, ஆளுநர் என்.ஆர். ரவியால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க சரியான காரணங்கள் குறிப்பிட வேண்டும் என பல்வேறு காரணங்ளுக்கு விளக்கம் கேட்டு, ஆளுநர் நீட் தேர்வு மசோதாவை திருப்பி அனுப்பியுள்ளார்.

அனைத்து கட்சிக் கூட்டம்

நீட் தேர்வு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதால், தமிழக அரசியல் வட்டாரத்தில், பெரும் பரபரப்பு எழுந்தது. பல்வேறு அரசியல் கட்சிகளும், ஆளுநர் முடிவு பற்றி, பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, அனைத்து கட்சிக் கூட்டத்திற்கும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மேலும், இந்த கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

வானதி சீனிவாசன் ஆவேசம்

இந்நிலையில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது பற்றி, பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன், கருத்து தெரிவித்துள்ளார். 'நீட் விலக்கு மசோதா பற்றி, கடந்த சட்டப்பேரவைத் தொடரிலும், அனைத்து கட்சி கூட்டத்திலும், பாஜக தனது நிலைப்பாட்டை தெரளிவாக எடுத்துக் கூறியுள்ளது. நீட் விலக்கு மசோதாவை, குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், ஆளுநர் வைத்திருக்கிறார் என தமிழக அரசு முதலில் குற்றஞ்சாட்டியது.

மேலும், மாநில அரசு அனுப்பும் அனைத்து விஷயங்களையும், குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டிய கட்டாயமும் ஆளுநருக்கு கிடையாது. அப்படி செய்வதற்கு ஆளுநர் ஒன்றும் தபால்காரர் கிடையாது. மசோதாவில் உள்ள விஷயங்கள் குறித்து, தெளிவு பெற ஆளுநருக்கு உரிமை இருக்கிறது.

தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்

நீட் தேர்வு தொடர்பாக, உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இருந்து, இந்த மசோதா எந்த வகையில் மாறப்பட்டிருக்கிறது என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு, தமிழக அரசுக்கு உள்ளது. மசோதா திருப்பி அனுப்பப்பட்டுள்ள காரணத்தையும், ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். நீட் விவகாரத்தில், உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு, தமிழக அரசைக் கட்டுப்படுத்தாது என உறுதிப்படுத்தும் வரை, இந்த விவகாரம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்' என வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

MKSTALIN, VANATHI SRINIVASAN, TN GOVERNOR, NEET EXAM, வானதி சீனிவாசன், நீட் தேர்வு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்