தமிழக நீட் தேர்வுக்கான 6 மையங்கள் திடீர் மாற்றம்.. எந்தெந்த மையங்கள் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாளை மறுநாள் நீட் தேர்வு நடக்க உள்ள நிலையில், நெல்லை மற்றும் மதுரையில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த 6 தேர்வு மையங்கள் திடீரென மாற்றப்பட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ். மருத்துவப் படிப்புக்களுக்கு நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நாளை மறுநாள் அதாவது வரும் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற இருக்கிறது. தமிழகத்திலும் தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் கொடுக்கப்பட்டு தேர்வு மையங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணத்தினால் சில தேர்வு மையங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் நீட் தேர்வுக்காக அமைக்கப்பட்டிருந்த 6 தேர்வு மையங்கள் கடைசி நேரத்தில் திடீரென மாற்றப்பட்டுள்ளன.
தேர்வர்கள் புதிய தேர்வு மையங்களின் அமைவிடத்தை தெரிந்து வைத்துக்கொண்டு இடர்பாட்டை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கடந்தாண்டு நீட் தேர்வின் போது தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- செல்போன் மூலம் பாலியல் தொல்லை.. முதியவரை அடித்து உதைத்த மக்கள்!
- சூறைக்காற்றுடன் கூடிய கனமழை.. உயிரிழந்த வெளிநாட்டுப் பறவைகள்.. நெல்லையில் சோகம்!
- ‘இந்த டைம் தமிழில் தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழ்நாட்லயே நீட் எக்ஸாம்’.. ஹால் டிக்கெட் பிழைதிருத்தும் கடைசி தேதி இதான்!
- 'விறுவிறுவென முன்சென்று.. ஆம்புலன்ஸ் வந்ததும் 4 ஸ்டெப் பின்னால் போய் வழிவிடும் அழகர்’.. வைரல் வீடியோ!
- நீட் தேர்வு ரத்து: 'அந்தர் பல்டி' அடித்த கூட்டணிக் கட்சி.. கவலையில் அ.தி.மு.க.!
- 'இனிமேல் ‘டிக்-டாக்’ல...'வசனம்,டான்ஸ்' எல்லாம் பண்ண முடியாது'...அதிரடி நடவடிக்கையில் ஐகோர்ட்டு!
- இனி ‘இந்த வகையான ஷோ’ க்களை டிவி-யில் ஒளிபரப்ப தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!
- என்ன கண்ணகி பிறந்தது மதுரையிலா? புது சிலப்பதிகார கதையை உருவாக்கிய ஸ்டாலின்! பிரச்சாரத்தில் நடந்த சுவாரஸ்யம்!
- டீ ஷர்ட்டில் அழகிரி.. ஸ்டாலினுடன் செல்ஃபி.. இளைஞர் செய்த வைரல் காரியம்!
- எதுகை மோனையில் கவிதை மற்றும் பஞ்ச் வசனங்களால் பிரச்சாரத்தை அமர்களப்படுத்திய மு.க.ஸ்டாலின்! அப்படி என்ன கவிதை?