தளர்வு அறிவித்த 'ஒரே நாளில்' அப்ளை பண்ணிய 1.2 லட்சம் பேருக்கு 'இ-பாஸ்!'.. 'மகிழ்ச்சியில்' திளைத்த விண்ணப்பதாரர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இ-பாஸ் முறை அமலுக்கு வந்தது.

இதன்படி ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு, ஒரு மாநிலத்தில் இருந்து வேறொரு மாநிலத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் அவசியம் என்ற கட்டுப்பாடு பின்பற்றப்பட்டது. இதனையடுத்து தற்போது இந்த நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்துள்ள போதிலும் மாநிலங்களில் ஆங்காங்கே இ-பாஸ் நடைமுறை சில தளர்வுகளுடன் பின்பற்றப்பட்டு வந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மண்டலம் விட்டு மண்டலம் போக இ-பாஸ் அவசியம் என்கிற நிலை மாறி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்கிற கடுமையான விதி தொடரப்பட்டது.

இறப்பு , மருத்துவ சிகிச்சை, திருமணம் உள்ளிட்ட அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே அளிக்கப்பட்டு வந்த இ-பாஸ் மற்ற காரணங்களுக்காக கிடைக்காத நிலை நீடித்து வந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியதாக கோரிக்கை எழுந்ததையடுத்து ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் செல்போன் எண்ணை இணைத்து விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தாமதமின்றி உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் என்றும் அதேசமயம் தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டும் பயணிகள் விண்ணப்பம் செய்து இப-பாஸ் பெற்றுக்கொண்டு பயணம் செய்யுமாறும் என்றும் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மிக அண்மையில் அறிவித்தார்.

இதனை அடுத்து இ-பாஸ் நடைமுறை தளர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அதுமட்டுமல்லாமல் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தானியங்கி முறையில் இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்குமே இ-பாஸ் என்கிற சூழல் உண்டான உடன் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு ஒரே நாளில் 1.20 லட்சம் பேர் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்