கடுமையாகும் இரவு நேர ஊரடங்கு... சென்னையில் குவிக்கப்பட்ட 10 ஆயிரம் போலீஸார்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் இரவு நேர ஊரடங்கின் போது விதிமுறைகளை கடுமையாகக் கண்காணிக்க சுமார் 10 ஆயிரம் போலீஸார் மாநகருக்குள் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடுமையாகும் இரவு நேர ஊரடங்கு... சென்னையில் குவிக்கப்பட்ட 10 ஆயிரம் போலீஸார்..!
Advertising
>
Advertising

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் அதிகரித்துள்ளதால் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்துவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். மேலும் வார நாட்களில் இரவு 10 மணி முதல் 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

nearly 10 thousand policemen to be in watch at chennai

வார நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வெளியூர் செல்பவதற்காக விமானம், ரயில் நிலையங்கள் செல்வதற்கு சொந்த மட்டும் வாடகை வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறு பயணிக்கும் பொழுது மறக்காமல் பயணசீட்டை உடன் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

nearly 10 thousand policemen to be in watch at chennai

அத்தியாவசிய பணிகளான பால் விநியோகம், தினசரி பத்திரிக்கைகள், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவம் சார்ந்த பணிகள், ஏடிஎம் மையங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் எரிபொருள் வாகனங்கள் இரவு நேரத்திலும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்றபடி இரவு நேர ஊரடங்கை கடுமையாகப் பின்பற்ற சென்னை மாநகர் முழுவதும் சுமார் 10 ஆயிரம் போலீஸார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளதால் விதி மீறுவோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட உள்ளது.

சென்னை, இரவு நேர ஊரடங்கு, சென்னையில் 10ஆயிரம் போலீஸார், கொரோனா, CHENNAI, NIGHT CURFEW, 10 THOUSAND POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்