‘நெருங்கும் வடக்கிழக்கு பருவமழை’... ‘9 மாவட்டங்களில்’... ‘அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு’... விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில், 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, நாகை, தஞ்சை ஆகிய 9 மாவட்டங்களில், கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சிலப் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வடக்கிழக்கு பருவ மழை துவங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகி உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரும் 17-ம் தேதி முதல் துவங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதையொட்டி, அடுத்த 5 நாட்களுக்கு, தமிழகத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெலுங்கானா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டைய மாநிலங்களில், இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘சீன அதிபருடனான சந்திப்பு முடிந்து’.. ‘டெல்லி திரும்பிய மோடி’.. ‘ட்விட்டரில் ட்ரெண்டாகும் #DontGoBackModi’..
- வேஷ்டி சட்டையில் மோடி | Video: Dhoti Clad Modi Welcomes Xi JinPing at Chennai's Mamallapuram!
- ‘13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’.. ‘சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல்’..
- ‘சென்னை வந்திறங்கியுள்ளேன்’.. ‘பிரதமர் மோடி தமிழில் உற்சாக ட்வீட்’..
- 'ரெண்டு' நாளைக்கு... இங்க 'டோல்கேட்' கட்டணம் கெடையாது.. என்ன காரணம்?
- ‘சீன அதிபர் சென்னை வருகை’ ரயில்கள் சிறிதுநேரம் நிறுத்தப்படுவதாக தகவல்..! விவரம் உள்ளே..!
- ‘கூடப் படிக்கும் கல்லூரி மாணவரை’... ‘மற்றொரு மாணவர் செய்த அதிர்ச்சி காரியம்’... 'சென்னையில் பதறவைக்கும் வீடியோ காட்சிகள்'!
- ‘வீட்டிலிருந்தே வேலை செய்யுங்க’... ‘ஐடி ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்’!
- ‘சென்னை வரும் சீன அதிபருக்காக’.. ‘தயாராகும் பிரம்மாண்ட விருந்தில்’.. ‘இடம்பெறும் தமிழர்களின் உணவுகள் என்னென்ன?’..