'மாவீரன் நெப்போலியனுக்கு என்ன நடந்தது'?... 'அவர் எப்படி இறந்தார்'?... 200 ஆண்டுகளுக்கு பிறகு விலகிய மர்மம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாவீரன் நெப்போலியன் மரணத்தில் உள்ள மர்மம் 200 ஆண்டுகளுக்குப் பின் விலகியுள்ளது.

மாவீரன் என அழைக்கப்படும் நெப்போலியன், பிரான்சின் முன்னாள் பேரரசர் மற்றும் இராணுவ தலைவராவார். இவர் பிரிட்டன் - பிரான்ஸ் இடையே நடந்த போருக்குப் பின் பிரிட்டன் ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டார். அவர் ஆப்பிரிக்கா அருகே உள்ள செயிண்ட் ஹெலனா தீவில் அடைத்துவைக்கப்பட்டிருந்த நேரத்தில் புற்று நோய்ப் பாதிப்பால் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் தனிமைச் சிறையிலிருந்த நெப்போலியனுக்கு என்ன நடந்தது? அவர் திட்டமிட்டுக் கொல்லப்பட்டாரா? என்பதற்குப் பதில் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில் செயிண்ட் ஹெலனா தீவிலிருந்து சென்னையின் அப்போதைய ஆளுநர் சர் தாமஸ் மன்றோவுக்கு, 1821 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் தேதி எழுதப்பட்ட கடிதம் ஒன்று அனுப்பப்பட்ட விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் அதில், மாவீரன் நெப்போலியன் மே 5 ஆம் தேதி மாலை உயிரிழந்ததாகவும், அவரது உடல் அதற்கு மறுநாளே குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் நடத்தப்பட்ட கூராய்வு முடிவில் அவர் குடல் புற்றுநோயால் உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நெப்போலியனின் தந்தையும் புற்றுநோயால் இறந்ததாக வரலாற்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

மற்ற செய்திகள்