‘ஆசிட் கலந்த மதுபானம்’.. ‘திடீர் வயிற்று வலியால் துடித்த நண்பர்கள்’.. சரணடைந்தவரின் பரபரப்பு வாக்குமூலம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் அருகே உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட முன்விரோதத்தால் ஆசிட் கலந்த மது கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி-வேலூர் அருகே உள்ள இருக்கூர் பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில்குமார், தியாகராஜன், ஆறுமுகம் மற்றும் சரவணன். இவர்கள் நான்கு பேரும் கடந்த 30ம் தேதி ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் அனைவரும் அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர். இதில் செந்தில்குமாரும், தியாகராஜனும் கடும் வயிற்று வலியால் துடித்துள்ளனர்.
இதனை அடுத்து அவர்களது உறவினர்கள் உடனே அருகில் உள்ள தனியார் மருத்துமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் இருவரும் குடித்த மதுவில் ஆசிட் கலந்திருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், உடன் மது அருந்திய சரவணனை கைது செய்தனர். மற்றொரு நபரான ஆறுமுகம் தலைமறைவாகினார்.
இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனை அடுத்து தலைமறைவாக இருந்த ஆறுமுகம் காவல் நிலையத்தில் சரணைடந்தார். அப்போது அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
அதில், ஆறுமுகம் முன்னதாக இருக்கூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக இருந்துள்ளார். இந்த முறை தனது மனைவி ராஜாமணியை துணைத் தலைவராக்க எண்ணியுள்ளார். அதனால் இருக்கூர் ஊராட்சி 2-வது வார்டில் அவரை நிறுத்தி போட்டியின்றி வெற்றி பெற வைத்துள்ளார். இதனை அடுத்து துணைத் தலைவராக தேர்வு செய்வதற்காக, இதே ஊராட்சியில் 6-வது வார்டில் வெற்றி பெற்ற செந்தில் குமாரின் மனைவி சத்யாவிடம் ஆதரவு கேட்டுள்ளார். ஆனால் அவர் ஆதரவு தர மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுகம் செந்தில் குமாரை கொலை செய்ய முடிவெடுத்துள்ளார். இதனை அடுத்து செந்தில் குமாரை மது அருந்த அழைத்துள்ளார். அப்போது தனது நண்பர் தியாகராஜனை உடன் அழைத்துக்கொண்டு செந்தில் குமார் வந்துள்ளார். ஒன்றாக மது அருந்தும்போது செந்தில் குமாருக்கும், தியாகராஜனுக்கும் மதுவில் ஆசிட் கலந்து கொடுத்துள்ளனர். இவை அனைத்தும் போலீசார் நடத்திய விசாரணையில் வெளிவந்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘கொலைக்கு கூலி ரூ.50,000, அட்வான்ஸ் ரூ.10,000’.. ஹோட்டல் ஓனருக்கு நடந்த கொடுமை.. சொந்தக்காரரின் பகீர் வாக்குமூலம்..!
- 'விஷத்தை' குடித்த 5 மாத கர்ப்பிணி... 'இறந்து' பிறந்த குழந்தை... அடுத்து 'நடந்த' பரிதாபம்!
- நான் சி.எம் டிரைவர் 'அமைதியா' இருங்க... சிறுமியின் குடும்பத்தாரை... 'அதிரவைத்த' போலீஸ்!
- ‘ஆஸ்திரேலியால வேலை வாங்கித் தரேன்’!.. ‘6 பெண்களுடன் கல்யாணம்’.. கண்பார்வை இல்லாதவரின் பகீர் வாக்குமூலம்..!
- "அடிச்சுக்கூட கேட்பாங்க... அப்பவும் சொல்லிராதீங்க" காமெடி பாணியில் 'குளத்திற்குள் பதுங்கியிருந்து' 2 மணி நேரமாக தண்ணி காட்டிய குற்றவாளி...!
- 'எஸ்.ஐ சுட்டு கொலை'... 'திடுக்கிடும் திருப்பம்'... 'குற்றவாளிகளுக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா'?
- ‘3 பெண் குழந்தைகள்’.. ‘ஆனா ஆண் வாரிசு இல்லை’.. பல நாள் வருத்தம்.. விபரீத முடிவெடுத்த இளம்பெண்..!
- கை, கால்கள் ‘கட்டப்பட்ட’ நிலையில் ‘கிணற்றில்’ மிதந்த சடலம்... ‘காணாமல்போன’ சிறுவனைத் தேடிய ‘பெற்றோருக்கு’ காத்திருந்த ‘பேரதிர்ச்சி’...
- 'தமிழகத்தை உலுக்கிய கொடூரம்'... 'சிறப்பு உதவி ஆய்வாளர் சுட்டு கொலை' ...வெளியான சிசிடிவி காட்சிகள்!
- 'கன்னியாகுமரி' அருகே பயங்கரம்... சப்-இன்ஸ்பெக்டர் 'துப்பாக்கியால்' சுட்டுக்கொலை... மர்ம நபர்கள் தப்பியோட்டம்!