VIDEO: 'வாங்க ஒரு ஸ்டெப் போட்டுட்டு போவோம்...' 'ஸ்டார்ட் மியூசிக்...' நமிதா,வானதி சீனிவாசன் ஆடிய 'வாத்தி கம்மிங்' டான்ஸ்...! வைரல் வீடியோ...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேர்தல் பரப்புரையின் போது தளபதி விஜயின் திரைப்பட பாடலுக்கு பாஜக வேட்பாளர் நடனமாடிய வீடியோ தற்போது சாமுகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

VIDEO: 'வாங்க ஒரு ஸ்டெப் போட்டுட்டு போவோம்...' 'ஸ்டார்ட் மியூசிக்...' நமிதா,வானதி சீனிவாசன் ஆடிய 'வாத்தி கம்மிங்' டான்ஸ்...! வைரல் வீடியோ...!

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலால் கொரோனா காலத்திலும் தமிழகமே திருவிழா போல பரபரப்பாக காணப்படுகிறது. அனைத்து கட்சி தலைவர்களும் தங்கள் தொகுதியிலும், மற்ற சட்டமன்ற தொகுதியிலும் இடைவிடாது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

                                       namitha Vanathi Srinivasan dancing Vijay's vaathi coming

இந்நிலையில் கோவையில் நட்சத்திர தொகுதியாக உள்ள தெற்கு சட்டப் பேரவைத் தொகுதியில் இன்று பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் பரப்புரை மேற்கொண்டார்.

                                  

அவருக்கு ஆதரவாக திரைப்படத்துறை நடிகை மற்றும் தற்போது பாஜக உறுப்பினராக இருக்கும் நடிகை நமீதாவும் வானதி சீனிவாசனுடன் வாக்கு சேகரிப்பில் கலந்து கொண்டார்.

அப்போது பாஜக கட்சியின் தேர்தல் குறும்படம் தயாரிக்கும் இளைஞர்கள் பரப்புரைக்கு வீடியோ பதிவுக்காக வந்திருந்துள்ளனர். மேலும் பரப்புரையின் ஒரு பாகமாக அங்கு பாடல்கள் ஒலிக்கப்பட்டு நடனமும் ஆடியுள்ளனர்.

                                     

மேலும் நடிகர் விஜய் அவர்களின் மாஸ்டர் திரைப்படத்தில் வரும் வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு நமீதா அவர்கள் நடனமாடியாது மட்டுமல்லாமல்,வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு நடனமாட கற்றுக் கொடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்த உற்சாகமான தேர்தல் பரப்புரையை வானதி சீனிவாசன் அவர்களே தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு 'வாத்தி கம்மிங்' எனவும் குறிப்பிடுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்