'வீட்டுக்குள்ள போக வழியில்ல...' 'இடையில கட்டப்பட்ட சுவர்...' வெளியூர் போயிட்டு வரதுக்குள்ள...' - நடுரோட்டில் தவித்த பெண்மணி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பள்ளிபாளையம் அடுத்த ஓடப்பள்ளியை சேர்ந்தவர் 45 வயதான கவிதா. இவர் அதேப்பகுதியை சேர்ந்த நாகலட்சுமி என்றவரின் வீட்டை ரூ.1 லட்சம் கொடுத்து போகியத்திற்கு எடுத்து வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில மாதங்களாக கவிதாவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த 6 மாதங்களாக, சிவரஞ்சனி தன் இரு குழந்தைகளுடன், தனது அம்மா வீட்டிற்கு வந்து இங்கேயே தங்கியுள்ளார்.

தற்போது உடல்நிலை தேறிய கவிதா கடந்த 25-ம் தேதி, ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் சென்றிருந்த நிலையில் மீண்டும் வீட்டிற்கு வந்து பார்க்கையில் அவரின் வீட்டின் கதவை அடைத்து, சுவர்  எழுப்பி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் வீட்டின் உள் நுழைய முடியாமல் வாசலில் கருங்கற்கள் கொட்டி தடை ஏற்படுத்தப்பட்டு இருந்தது. இதுகுறித்து தன் மகளுக்கு தகவல் தெரிவித்தவுடன் மகள் சிவரஞ்சனி, உடனடியாக தனது குழந்தைகளுடன் ஓடப்பள்ளிக்கு வந்துள்ளார்.

இதுகுறித்து கூறிய அப்பகுதி மக்கள்  கவிதா வசித்த வீட்டின் உரிமையாளர் நாகலட்சுமி, அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம், கந்து  வட்டிக்கு 1.50 லட்சம் வாங்கியதாகவும், அதற்கு பல லட்சம் ரூபாய்  வட்டியானதால், கடனை திரும்ப செலுத்த முடியாமல், கடன் கொடுத்தவர்  வீட்டை கிரயம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

தனது வீட்டில் உள்ள பொருட்களையும், போகியத்திற்கு  கொடுத்த பணத்தையும் திருப்பி தரும்படி,  கவிதா மற்றும் சிவரஞ்சனி, வீட்டின் புதிய உரிமையாளரிடம்  கேட்டுள்ளனர். ஆனால், பணத்தை தர மறுத்த அவர்,  கவிதாவையும் சிவரஞ்சனியையும் மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து கவிதாவிடம் எந்த தகவலும் அளிக்காமல் கடன் கொடுத்தவர் செய்த காரியம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, மகளும் தாயும் கடந்த இரு நாட்களாக தெருவில் நிற்கும் நிலை ஏற்பட்டது.

அடுத்தகட்டமாக கவிதா அவர்களின் மகள் சிவரஞ்சனி தங்களின் அவலநிலை குறித்து சிவரஞ்சனி, கலெக்டரை  செல்போனில் தொடர்பு கொண்டு புகார் அளித்ததாகவும், அதன்படி எஸ்பி மூலம் உரிய  நடவடிக்கை எடுக்க உத்தரவுவிட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வந்த  பள்ளிபாளையம் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி, இருதரப்பினரையும் அழைத்து பேசி, வீட்டு வாசலில் கிடந்த கற்கள்  அகற்றப்பட்டு, கதவின் முன்பிருந்த தற்காலிக சுவரும்  அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் இரு நாட்களாக வீதியில் அனாதையாக நின்ற தாயும்,  மகளும் வீட்டிற்குள் சென்ற மகிழ்ச்சியில், கலெக்டர், எஸ்பி மற்றும்  இன்ஸ்பெக்டருக்கு நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்