"கடவுளே...! அது என் மனைவியா இருக்க கூடாது...!” - போய் பார்த்தப்போ... ‘வாய் கட்டப்பட்டு’ சடலமாக கிடந்த இளம்பெண்... ஆமா, அந்த பெண்... கதறி ’அழுத’ கணவன்...?!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாமக்கல் மாவட்டத்தில் மாடு மேய்க்க சென்ற இரண்டு குழந்ந்தைகளின் தாய் இறந்த நிலையில் நிர்வாணமாக வனப்பகுதியில் இருந்து மீட்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள குண்டலிநாடு ஊராட்சி கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் (30) இவருக்கு தீபா (25) என்ற மனைவியும் 7 மற்றும் 2 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர். விவசாயம் தொழில் செய்து வரும் நடேசனுக்கு உதவியாக தீபா ஆடு மாடுகளை மேய்க்க செல்வார்.
அதுபோலவே நேற்று முன்தினம் (12.07.2020) தீபா துணி துவைத்து விட்டு மாடு மேய்த்து விட்டு வருவதாக கூறி, மாடுகளை மேய்க்க கீரைக்காடு வனப்பகுதி பக்கம் சென்றுள்ளார். பலமணி நேரம் ஆகியும் தீபா வீடு திரும்பாததால் பதறிய அவரின் கணவர் நடேசன் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.
இந்நிலையில் நேற்று ஒரு பெண்ணின் சடலம் கீரைக்காடு வனப்பகுதியில் ரத்தக்காயங்களுடன் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதாக அப்பகுதி மக்களிடையே தகவல் பரவியது. தன் மனைவியாக இருக்கக் கூடாது என எண்ணி சென்ற நடராஜன் அங்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்தது தனது மனைவி தீபா என்பதை அறிந்து கதறி அழுதார்.
அதையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் தீபாவின் உடலில் பல்வேறு காயங்கள் இருந்ததாகவும், அவர் சத்தமிட கூடாது என வாயில் துணி வைத்து கட்டப்பட்டு உள்ளது. மேலும் நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட தீபாவை வனப்பகுதிக்கு வந்த யாராவது அவரை பாலியல் வன்புணர்வு செய்து, அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இன்னும் பிரேத பரிசோதனை முடிவு வெளிவராததால் தீபாவின் இறப்பில் இன்னும் முடிவு எட்டவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'மனைவியை கொலை செய்து... 'ஆத்திரம்' அடங்காமல், மாமனாரையும் குத்தி, அவர் 'பிறப்பு உறுப்பை' சிதைத்து கொன்ற கொடூரன்!' - நெஞ்சடைக்கும் 'அதிர்ச்சி' சம்பவம்!
- "அவருக்கு 'வலிச்சா' என்னால தாங்க முடியாது... அதனால தான்..." புருஷனுக்கு 'தூக்க' மாத்திரை கொடுத்து... மயக்கத்திலேயே கொடூரமாக 'கொலை' செய்த மனைவி! - போலீஸ் தரும் 'அதிர்ச்சி' தகவல்!
- 'நீ பிரசவ வலியில துடிப்ப, அப்போ உன் கைய கெட்டியா புடிச்சிக்கணும்'... 'ஆசைப்பட்ட கணவர்'... நொறுங்கி போன கனவு!
- கல்யாணமான ‘ஒரே’ வருஷத்தில் பிரிந்த தம்பதி.. ‘வித்தியாசமான’ காரணத்தை கூறி விவாகரத்து வாங்கிய கணவன்..!
- 'ரூ.500 கோடி அபேஸ்... தமிழகத்தையே மிரட்டிய சதுரங்க வேட்டை தம்பதியை நியாபகம் இருக்கா?'.. ரிலீஸ் ஆனதும் மனைவி போட்ட ஸ்கெட்ச்!
- VIDEO: 'ஊரடங்கால வேல போச்சு... கந்துவட்டி கொடுமை'... மகனின் டாக்டர் கனவுக்காக... ஏழைத் தொழிலாளி எடுத்த விபரீத முடிவு!
- VIDEO: ‘8 வருஷமா குழந்தை இல்ல’.. கண்மூடித்தனமாக தாக்கிய கணவன்.. தடுத்த ‘செல்லநாய்’.. நெஞ்சை பதறவைத்த சிசிடிவி வீடியோ..!
- அவரு வெளியூரு போயிருக்காரே... 'சண்டை' போட்ட கணவனுக்கு மனைவியால் ஏற்பட்ட கதி... 'ஹைலைட்டே' அந்த விஷயம் தான்!
- 'ஓஹோ புருசனுக்கு இப்படி தான் டீ கொடுப்பியா'... 'கதறிய தாய்'... 'அலறியடித்து கிச்சனுக்கு ஓடிய குழந்தைகள்'... இப்படி ஒரு கணவன் இருப்பாரா?
- 'அவருக்கு கொரோனா இருக்கும்னு நினைக்குறேன்...' 'வீட்லலாம் ஏத்த முடியாது...' 'மனைவி வீட்டுக்குள்ள விடலன்னு தெருவில் நின்ற கணவர்...' கடைசியில்...!