"இரவுநேரம் லிஃப்ட் கேட்ட திருநங்கைகள் செய்த காரியம்".. காருடன் காவல் நிலையம் தப்பியோடிய தொழிலதிபர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாமக்கலில் காரில் லிஃப்ட் கேட்பது போல் நடித்து, தொழிலதிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட திருநங்கைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertising
Advertising

திருச்சி அருகே உள்ள திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த கட்டிடக் கலை நிபுணரான ரகுமான் என்பவர் பணிநிமித்தமாக சத்தியமங்கலம் வரை சென்றுவிட்டு, மீண்டும் நேற்று இரவு நாமக்கல் வழியே தனது ஊருக்கு திரும்பிகொண்டிருந்தார்.

அப்போது நாமக்கல் அருகே வந்த அவரது காரை வழிமறித்த திருநங்கைகள் 2 பேர், அவரிடம் லிஃப்ட் கேட்பது போல் பேசி நடித்துள்ளனர். ஆனால் அவர்களின் அணுகுமுறை பலிக்காததால், சிறிது நேரத்தில் ரகுமானுடன் சண்டையிடத் தொடங்கிய இருவரும் பணம் மற்றும் நகைகளை வழிப்பறி செய்ய முயன்றதாகத் தெரிகிறது.

இதனால் அவர்களிடம் இருந்து தப்பித்த ரகுமான், நாமக்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு விரைந்து வந்த போலீஸார், நாமக்கல் கொழந்தான் தெருவைச் சேர்ந்த அர்ச்சனா மற்றும் சேலம் ஓமலூரைச் சேர்ந்த ரேகா உள்ளிட்ட 2 திருநங்கைகள்தான் வழிப்பறி செய்தது என்பதைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்