‘காவி வேஷ்டி’.. கிணற்றில் ‘தலைகுப்புற’ கிடந்த சாமியார் சடலம்.. வெளியான திடுக்கிடும் தகவல்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விவசாய கிணற்றில் சாமியர் ஒருவரின் சடலம் மிதந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுக்காலியூர் அருகே உள்ள விவசாய கிணற்றில் ஆணின் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. உடனே சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து வந்துள்ளனர். அப்போது கிணற்றில் காவி வேஷ்டி அணிந்து தலை குப்புற ஆணின் சடலம் மிதந்து கிடந்துள்ளது. இதனை அடுத்து சடலத்தை மீட்க தீயணைப்பு வீரர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கிடந்த ஆணின் சடலத்தை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த நபர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த சிந்து நகரில் உள்ள ஆசிரமத்தைச் சேர்ந்த ராஜசேகரன் என்ற பூர்ண சேவானந்தா (55) என்பது தெரியவந்துள்ளது.
இவர் எதற்காக கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் இறந்து கிடந்தார்? இது தற்கொலையா? அல்லது கொலையா? என போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பூர்வ சேவானந்தாவின் மீது திருப்பூர் பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு ஒன்று பதியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் இன்று (12.03.2020) நடைபெற இருந்தது. இந்த நிலையில் விசாரணைக்கு பயந்து பூர்ண சேவானந்தா தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உடம்புல காயம் இருக்கு’.. ‘மடியில் மயங்கி விழுந்த 1ம் வகுப்பு மாணவி’.. திருப்பத்தூர் அருகே பரபரப்பு..!
- 'நண்பன்னு நம்பி தானே உன்ன வீட்டுக்குள்ள விட்டேன்'...'இப்படி சீரழிச்சிட்ட'... நெஞ்சை உருக்கும் சோகம்!
- ‘போதையில் மனைவியுடன் தகராறு!’.. ‘அறைக்குள் சென்று பூட்டிக்கொண்ட கணவர்’.. காவலர்களின் சமயோஜிதத்தை ‘நேரில் அழைத்து பாராட்டிய’ காவல் ஆணையர்!
- ‘ரொம்ப நேரமா பூட்டியிருந்த கதவு’.. ‘உடைச்சு உள்ளே போன போலீஸ்’.. முன்னாள் காதலிக்கு நடந்த பயங்கரம்..!
- 'கையில சுத்தமா பணம் இல்ல... ஊர்லயும் 'தலைகாட்ட' முடியாது... லாட்ஜில் 'உயிருக்கு' போராடிய பெண்... கடற்கரையில் சடலமாகக் கிடந்த காவலர்!
- நண்பர்களோடு ‘சிக்கிய’ காதலன்... ‘16 வயது’ சிறுமிக்கு நேர்ந்த ‘பரிதாபம்’... விசாரணையில் வெளியான ‘அதிர்ச்சி’ தகவல்...
- ‘மெசேஜை’ பார்த்து ‘பதறிப்போய்’ புகார் கொடுத்த பெண்... ‘54 வழக்குகளில்’ தேடப்பட்ட கும்பல்... ‘ஆடம்பர’ வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு செய்துவந்த காரியம்...
- கணவன் ‘சமைத்ததை’ வாயில் வைத்ததும்... அதிர்ந்துபோய் ‘தலைதெறிக்க’ ஓடிய ‘மனைவி’... உறைந்து நின்ற ‘போலீசார்’...
- திருமணம் செய்துவைத்த ‘நண்பனே’ செய்த கொடூரம்... தப்பித்த ‘6 மாத’ குழந்தை... இளம் ‘தம்பதிக்கு’ நேர்ந்த ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...
- ‘கடைசியா அப்பாவோட முகத்தை பார்க்கணும்’... ‘உருக்கமாக கடிதம் எழுதிவைத்துவிட்டு’... ‘உயிரிழந்த தந்தையை பார்க்கச் சென்ற மகள்’... 'களேபரத்தால் நிறைவேறாத ஆசை'!