‘கூப்பிட்டு பார்த்தும் வரல’.. ‘பெட் ரூமில் கிடந்த 2 வயர், 5 அடி நீளக்கம்பி’.. பதறிப்போன மாமியார்..! கைதான இன்ஜினீயர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மனைவியை மின்சாரம் பாய்ச்சியை கொலை செய்ய முயன்ற இன்ஜினீயரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் அன்பு நகரை சேர்ந்தவர்கள் தங்கவேல்-வளர்மதி தம்பதியினர். இவர்களது மகள் ரூபிகா (30). இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சிவபிரகாஷம் என்ற கம்ப்யூட்டர் இன்ஜினீயருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் மனைவியிடம் சிவப்பிரகாஷம் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது தடுக்க வந்த மாமனார் தங்கவேலுவை சிவபிரகாஷம் கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த தங்கவேல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் சிவபிரகாஷம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனிடையே ஜாமினில் வெளியே வந்த சிவபிரகாஷம் தாய் வீட்டில் இருந்த தனது மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால் ரூபிகா வர மறுத்தாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த அவர் தனது மனைவியை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ரூபிகாவின் வீட்டின் அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்து 2 வயர்களை 5 அடி நீளக்கம்பியுடன் இணைத்து படுக்கையறை வழியாக மனைவி ரூபிகாவை கொலை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. வீட்டுக்குள் வயர் இருப்பதை பார்த்த ரூபிகாவின் தாய் வளர்மதி உடனே இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது நாமக்கல் பேருந்து நிலையத்தில் சிவபிரகாஷம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனே விரைந்து சென்ற போலீசார் பேருந்து நிலையத்தில் இருந்த சிவபிரகாஷத்தை கைது செய்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘ஆத்திரத்தில் அண்ணனின் மனைவியை’.. ‘கொலை செய்துவிட்டதாக நினைத்து’.. ‘இளைஞர் செய்த அதிர்ச்சிக் காரியம்’..
- ‘துப்பாக்கி எங்க கிடைச்சது..?’ பாலிடெக்னிக் மாணவர் சுடப்பட்ட சம்பவம்..! சரணடைந்த நண்பர்..!
- ‘மாணவிகளிடம் சில்மிஷம்’.. ‘திட்டிய ஆசிரியர்’.. உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிய மாணவர்கள்..! பரபரப்பு வீடியோ..!
- இன்றைய முக்கியச் செய்திகள்.. ஓரிரு வரிகளில்.. ஒரு நிமிட வாசிப்பில்!
- அம்மாவை காக்க அப்பாவை கட்டையால் அடித்துக் கொன்ற மகன்..! பரபரப்பு சம்பவம்..!
- ‘பாலிடெக்னிக் மாணவர் மீது துப்பாக்கி சூடு’!.. தப்பி ஓடிய நண்பர்கள்..! தாம்பரம் அருகே பரபரப்பு..!
- ‘ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க எளிய முறை’.. ‘அசத்திய அரசு பள்ளி மாணவி’.. குவியும் பாராட்டுக்கள்..!
- 'நான் இருக்கும்போது இன்னொரு பொண்ணா?'... 'ஜாலியா படத்துக்கு போன கணவர்'...வச்சு செஞ்ச மனைவி!
- 'மூனே மூனு அடிதான்'.. 'நெனைச்சதெல்லாம் நடக்கும்'.. 'பூசாரி கையால் சாட்டையடி'.. விநோத திருவிழா!
- ‘மாஞ்சா நூல்’ அறுத்து பெற்றோர் கண்முன்னே விழுந்த குழந்தை..! பதற வைத்த சிசிடிவி வீடியோ..!