‘அடுத்தடுத்து வரும் குட் நியூஸ்’... ‘குணமடைந்த கடைசி 15 நபர்கள்’... 'கொரோனா பாதிப்பு இல்லாத 5-வது மாவட்டம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தில் இன்று கோவையை தொடர்ந்து கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாறியுள்ளதாக அம்மாவட்ட  ஆட்சியர் மேகராஜ் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் 3-வது இடத்தில் உள்ளது. ஆரம்பத்தில் குறைவாக இருந்த கொரோனா வைரஸ் டெல்லி மாநாடு மூலம் அதிகரிக்க தொடங்கியது. பின்னர் அது குறைந்து அதிகளவில் நோயாளிகள் குணமடைந்த நிலையில், கோயம்பேடு சந்தை மூலம் பச்சை மண்டலத்துக்கு முன்னேறிய பல மாவட்டங்களில் அதிவேகத்தில் கொரோனா பரவியது.

இந்நிலையில்,  அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று கடைசி 15 நபர்கள் உள்பட, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 77 பேரும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து அந்த மாவட்டம் கொரோனா வைரஸ் இல்லாத 5-வது மாவட்டமாக மாறியுள்ளது. ஏற்கனவே, ஈரோடு, சிவகங்கை,  கொரோனா இல்லாத மாவட்ட வரிசையில் இடம்பெற்ற நிலையில் நேற்று திருப்பூரும், இன்று கோயம்புத்தூரும், அதற்கு அடுத்ததாக நாமக்கல்லும் கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்