நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. முதல் வெற்றியை பதிவு செய்த நாம் தமிழர்.. தம்பிகள் குதூகலம்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

Advertising
>
Advertising

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மாவட்ட ஊராட்சி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ஆகிய இடங்களில் ஓர் இடத்தைக்கூட நாம் தமிழர் கட்சி பெறவில்லை. இதற்கு பதில் அளித்த சீமான், ''ஒரு கட்சி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர முடியும். ஒரேநாளில் ஒரு செடியில் பூ பூப்பதும் இல்லை, காய்ப்பதும் இல்லை'' என்று தெரிவித்திருந்தார். மதிமுக, வி.சி.க, அமமுக உள்ளிட்ட கட்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றாலும், நாம் தமிழர் கட்சியும் மக்கள் நீதி மய்யமும் படுதோல்வியை சந்தித்துள்ளன.

உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய சீமான், 'மக்களிடம் வாக்கு சேகரிப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் நான் ஒருவன்தான் சுற்றிச் சுழன்று பரப்புரை செய்து வருகிறேன். மற்ற கட்சியினர் எல்லாம் வாக்காளர்களுக்கு பணம், பட்டுப்புடவை, நகை எனக் கொடுத்து வாக்குகளைப் பறிப்பதற்கு வரிசை கட்டி நிற்கிறார்கள்' என விமர்சனம் செய்தார். சட்டமன்றத் தேர்தலில் ஆறு சதவிகித வாக்குகளுக்கு மேல் பெற்றதால் இந்தமுறை அதிகப்படியான உள்ளாட்சிப் பதவிகள் கிடைக்கலாம் எனவும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பேசி வந்தனர். இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நாம் தமிழர் கட்சிக்கு அதிர்ச்சியை அளித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில்,  தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.வாக்குப்பதிவு முடிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது.  இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. சென்னையில் 15 மையங்களில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது நிவரப்படி திமுக கூட்டணி 4 மாநகராட்சிகளில் முன்னிலையில் உள்ளது. அதே போல 12 நகராட்சியிலும் திமுக கூட்டணியே முன்னிலை பெற்றுள்ளது

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் தொகுதி கப்பியறை பேரூராட்சியில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி நாம் தமிழர் வேட்பாளர் சோபா ஆன்சி வெற்றி வாகை சூடினார். நாம் தமிழர் வேட்பாளர் - 417 வாக்குகள் பெற்றுள்ளார் காங்கிரஸ் வேட்பாளர்  217 வாக்குகள் மட்டும் பெற்றார். இதன் மூலம் சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தலில் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதே போல நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் மேலும் பலர் வெற்றி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

NAM TAMILAR, SEEMAN, CANDIDATE VICTORY, KANYAKUMARI, URBAN LOCAL BODY ELECTION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்