'இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே'... 'வேட்பாளர் பட்டியல் வெளியிடும் முன்பே வேட்புமனு தாக்கல்'... அதிர்ந்துபோன பாஜக!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நொடிக்கு நொடி பல பல பரபரப்புகள் தொற்றி கொண்டுள்ளன.
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான பட்டியல் 10-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, 1. திருவண்ணாமலை, 2. நாகர்கோவில், 3. குளச்சல், 4. விளவங்கோடு, 5. ராமநாதபுரம், 6. மொடக்குறிச்சி, 7. துறைமுகம், 8. ஆயிரம் விளக்கு, 9. திருக்கோவிலூர், 10. திட்டக்குடி (தனி), 11. கோவை தெற்கு, 12. விருதுநகர், 13. அரவக்குறிச்சி, 14. திருவையாறு, 15. உதகமண்டலம், 16. திருநெல்வேலி, 17. தளி, 18. காரைக்குடி, 19. தாராபுரம் (தனி), 20. மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இருப்பினும் பாஜக போட்டியிடும் தொகுதிகளில் அதன் வேட்பாளர்களை இன்னும் அறிவிக்கவில்லை. பாஜக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன், மாநில பொதுச் செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சரும் கன்னியாகுமரி மக்களவை தொகுதி வேட்பாளருமான பொன்.ராதாகிருஷ்ணன் அடங்கிய குழுவினர் இன்று டெல்லி சென்றுள்ளனர்.
இதில், வேட்பாளர்களின் சாதக, பாதகங்களை அறிந்து இறுதிப் பட்டியலை பாஜக மத்தியத் தேர்தல் குழு இன்று இரவோ, நாளையோ வெளியிட உள்ளது. நிலைமை இப்படி இருக்க முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாஜக மாநிலத் துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் நெல்லையில் போட்டியிட இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
பாஜக வேட்பாளர் பட்டியல் இதுவரை வெளியாகாத நிலையில், நயினார் நாகேந்திரன் பாஜக சார்பில் வேட்பு மனுத்தாக்கல் செய்திருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'அங்குட்டு வேணாம் இங்குட்டு போவோம்'... 'பாஜக'வுக்கு நோ சொல்லி தினகரனுடன் கைகோர்த்த 'பிக்பாஸ் பிரபலம்'!
- 'சென்னையில் பொய்த்துப்போன எதிர்பார்ப்பு'... 'தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள்'... வெளியான முழு பட்டியல்!
- ‘விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை’!.. அதிமுக கூட்டணி கட்சிகள் சொன்னது என்ன..?
- ‘பரபரக்கும் அரசியல் களம்’!.. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க யாருக்கு வாய்ப்பு அதிகம்?.. வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்..!
- 'பங்கு மக்களே பாஜகவில் இந்த வேட்பாளருக்கு ஓட்டு போடுங்க'... 'சர்ச் நிர்வாகம் விடுத்த வேண்டுகோள்'... அதற்காக அவர்கள் சொல்லும் காரணம்!
- 'நீண்டு கொண்டே சென்ற பேச்சுவார்த்தை'... 'நள்ளிரவில் நடந்த கையெழுத்து'... 'பாஜகவுக்கு 20 தொகுதிகள்'... நடந்தது என்ன?
- ‘கேரள சட்டமன்ற தேர்தல்’!.. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் விலையை குறைப்போம்’.. கேரள பாஜக தலைவர்..!
- 'கேஸ் சிலிண்டர் விலை ஏற காரணம் இவங்க ''இரண்டு'' பேரு தான்'... பரபரப்பு குற்றசாட்டை சொன்ன ஹெச்.ராஜா!
- பாஜகவில் இணைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.. பரபரக்கும் மேற்கு வங்க தேர்தல் களம்..!
- 'அப்படி மட்டும் சொல்லாதீங்க'... 'நேரலையில் பாஜக தலைவர் மீது செருப்பை வீசிய பங்கேற்பாளர்'... அவர் ’அப்படி’ என்ன சொன்னார்?... வைரலாகும் வீடியோ!