'எம்.பி.ஏ படிச்சிட்டு எதுக்கு இந்த வேலை'... 'மிரள வைத்த பட்டதாரி இளைஞர்'... அதிர்ந்து நின்ற போலீசார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

எம்.பி.ஏ படித்த பட்டதாரி இளைஞரிடம் இருந்து 2.50 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள இரண்டு நகைக் கடைகளில், இரண்டு மாதங்களில் கிலோ கணக்கில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள நகைக் கடை உரிமையாளர்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்கள். இந்த சூழ்நிலையில் மார்த்தாண்டம் ரயில் நிலையம் அருகே காவல்துறையினர் ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

அப்போது காவல்துறையினரைப் பார்த்தவுடன் பைக்கில் வந்த இளைஞர் ஒருவர் தப்பி ஓட முயற்சி செய்தார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அந்த நபரை விரட்டி சென்று பிடித்தனர். இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அவரின் பெயர் எட்வின் ஜோஸ் என்பதும்,  எம்.பி.ஏ பட்டதாரி என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து என் காவல்துறையினரைப் பார்த்தவுடன் ஏன் தப்பி ஓட முயற்சி செய்தார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தார். இதையடுத்து காவல்நிலையம் கொண்டு சென்று விசாரணை செய்தபோது, மார்த்தாண்டம் நகைக்கடைகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டது இவர் தான் என்பது தெரியவந்தது.

அவரிடம் இருந்து 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்றரை கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. எம்.பி.ஏ படித்த பட்டதாரி இளைஞர் இந்த தொடர் திருட்டில் ஈடுபட்டது காவல்துறையினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

POLICE, MBA GRADUATE, JEWELS, THEFT, NAGERCOIL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்