‘அப்பாவிடம் தகராறு செய்த வேன் டிரைவர்’.. ஆத்திரத்தில் மகன் செய்த அதிர்ச்சி காரியம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாகர்கோவில் அருகே அப்பாவிடம் தகராறு செய்த வேன் டிரைவரை மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த குருசடி பகுதியை சேர்ந்தவர் வேன் டிரைவர் அஜி (30). அப்பகுதியில் உள்ள கோயில் ஒன்றின் திருவிழா நடத்துவது குறித்து ஊர்கூட்டம் நடந்துள்ளது. அப்போது உறவினர்கள் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் அது தகராறில் முடிந்துள்ளது. அந்த சமயம் அஜி தனது உறவினரான அன்பு என்பருடன் தகராறு செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரச்சனை ஒன்றில் அன்புவை அஜி தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தகராறு குறித்து அன்புவின் மகன் அரவிந்த் (23) என்பவருக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர் தனது சித்தப்பா மகன் திலக் என்பவருடன் பைக்கில் சென்றுள்ளனர். சாலையோரம் நின்றுகொண்டிருந்த அஜி இவர்கள் வருவதை அறிந்த தப்பி ஓட முயன்றுள்ளார். ஆனாலும் அவர்கள் ஒரு கட்டையால் அஜியின் தலையில் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த அஜி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார். உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அஜி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அஜியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளில் அடிப்படையில் தலைமறைவாக உள்ள அன்பு மற்றும் அவரது உறவினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தந்தையிடம் தகராறு செய்ததற்காக வேன் டிரைவரை மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘சாலையோரம் எரிந்த நிலையில் கிடந்த பெண்ணின் சடலம்’.. அருகே கிடந்த ‘மதுபாட்டில்கள்’.. மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!
- 'மனைவியை' கொன்று... இறந்த பின்னரும் 'கணவன்' செய்த கொடுமை... 'அதிர்ச்சியில்' உறைந்து போன மக்கள்!
- 'சந்தோஷமா இருந்த குடும்பம்'... '3 குழந்தைகள் உள்பட தம்பதிக்கு'... 'இளைஞரால் நடந்தேறிய கொடூரம்'... 'திகைப்பூட்டிய சம்பவம்'!
- அவ உனக்கு 'தங்கச்சி' வேணும், இப்டி பண்ணாத... 'கண்டித்த' அண்ணன்... கடைசியில் நடந்த பயங்கரம்!
- ‘மனைவி, மகளை துப்பாக்கியால் சுட்ட தந்தை’.. அடுத்து 13 வயது மகனை சுட முயன்றபோது நடந்த பயங்கரம்..!
- 'நாயா அது... பேய்!'... 'தெரு நாய்க்காக சண்டையிட்ட பெண்கள்'... அம்மாவை இழந்த மகள்... கதறும் உறவினர்கள்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!
- ‘தனியாக வீட்டில் இருந்த செவிலியருக்கு’... ‘நிகழ்ந்த பயங்கரம்’... 'மகளிர் நீதிமன்றம் கொடுத்த'... 'அதிகபட்ச தண்டனை'!
- ‘பேரதிர்ச்சி’ கொடுத்த ‘மாப்பிள்ளை’... ‘கதறும்’ சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர்... ‘திருமணத்திற்கு’ ஒரு வாரம் முன் நேர்ந்த ‘துயரம்’...
- ‘தாய் வீட்டுக்கு விருந்துக்குப் போன புதுமணதம்பதி’.. ‘நீண்ட நேரமாக பூட்டியிருந்த கதவு’.. திருமணம் ஆன 3 நாளில் நடந்த சோகம்..!