மொபைல் போன், லேப்டாப்'ல இருந்த ஆபாச வீடியோக்கள்.. நாகர்கோவில் காசி வழக்கில்.. அதிர வைத்த சிபிசிஐடி ரிப்போர்ட்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சுஜி (எ) காசி. பல இளம் பெண்கள் மற்றும் மாணவிகளை காதலிப்பதன் பெயரில் ஏமாற்றி, பின்னர் ஆபாச படங்களை எடுத்து அதனை  வெளியிட்டு விடுவதாக மிரட்டி, அவர்களை பாலியல் வன்கொடுமையும் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "வீட்ல பயங்கர தோஷம் இருக்கு.. ஆம்பிளைங்களுக்கு தெரியாம நான் சொல்றத செய்யணும்".. புதுசாக உருட்டிய பெண் சாமியார்.. நம்பிய குடும்பத்துக்கு நேர்ந்த கதி.!

தமிழகம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மொத்தம் 120 க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மற்றும் மாணவிகள் காசி மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சில பெண்கள் புகாரளித்ததையடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு காசி கைது செய்யப்பட்டிருந்தார்.

இளைஞர் ஒருவர், இப்படி நூற்றுக்கணக்கான பெண்களை ஏமாற்றி, மிரட்டி ஆபாச படங்கள் எடுத்திருந்த சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

காசி மீது ஏராளமான வழக்குகள்

மேலும், இது தொடர்பாக இந்த வழக்கில் மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் என பலரை காதலிப்பதாக கூறி அவர்களை ஏமாற்றியதோடு பாலியல் வன்கொடுமை செய்துள்ள காசியின் மீது போக்சோ வழக்கு, பாலியல் வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே போல, இந்த வழக்குகளை சிபிசிஐடி காவல்துறை விசாரித்து வருகிறது.

காணாமல் போன வீடியோக்கள்..

தொடர்ந்து, காசியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன் மற்றும் லேப்டாப் உள்ளிட்டவற்றில் இருந்த ஆபாச படங்களும் அழிக்கப்பட்டு இருப்பதை அறிந்து சைபர் கிரைம் போலீசார் அதிர்ச்சி அடைந்திருந்தனர். இதனை யார் அழித்திருக்கக் கூடும் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போது, காசியின் தந்தையான தங்க பாண்டியன் இந்த செயலை செய்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.

இதனையடுத்து, இந்த வழக்கில் காசியின் தந்தை தங்க பாண்டியன் விசாரிக்கப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து, தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் மனுவை தாக்கல் செய்திருந்தார் தங்க பாண்டியன். இந்த மனு இன்று நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி போலீசார் தரப்பில், காசியின் தந்தைக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என விசாரணையின் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

சிபிசிஐடி அறிக்கையால் அதிர்ச்சி

சிபிசிஐடி தாக்கல் செய்த அறிக்கையில், காசியின் வீட்டிலிருந்து மொபைல் போன் மற்றும் அவர் பயன்படுத்தி வந்த லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்த போது, அதில் 1900 நிர்வாண படங்கள் மற்றும் 400 ஆபாச வீடியோக்கள் இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளதாக சிபிசிஐடி குறிப்பிட்டுள்ளது, தற்போது கடும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

அதே போல, 120 பெண்களுக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளதால், இதில் சிலர் மட்டுமே சாட்சி அளிக்க முன்வந்துள்ளனர். இன்னும் பல சாட்சிகளை விசாரணை செய்ய வேண்டி இருப்பதால், ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் சிபிசிஐடி அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர். இதனால், வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளதால், இந்த வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக உள்ள காசியின் தந்தை தங்க பாண்டியனுக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி, அவரது ஜாமீன் மனுமையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Also Read | பந்துகள் போல மாறும் வானம்..எப்படி உருவாகின்றன இந்த மேகங்கள்? ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

NAGERCOIL, NAGERCOIL KASI VIDEOS, LAPTOP, MOBILE PHONES

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்