‘நாங்க இப்படிதான் கல்யாணம் பண்ண ஆசை படுறோம்’.. கிரீன் சிக்னல் கொடுத்த பெற்றோர்.. ஜோடிக்கு குவியும் வாழ்த்து..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழர் பாரம்பரியம்படி திருமணம் செய்த மணமக்களுக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் ராஜன்-பிரீத்தி. வேறு மாதங்களைச் சேர்ந்த இருவரும் தங்களது திருமணம் தமிழ் முறைப்படி நடத்த வேண்டும் என விரும்பியுள்ளனர். உடனே தங்களது பெற்றோரிடம் இதுகுறித்து தெரிவிக்கவே, அவர்களும் இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து மதச்சடங்குகள் இல்லாமல் பண்டைய தமிழர் முறைப்படி திருமணம் நடைபெற்றது. மணமகன் மஞ்சள் கிழங்கால் ஆன தாலி கட்டியதும், 23 வகையான தானியங்களில் ஆரத்தி எடுக்கப்பட்டது. பின்னர் திருமணத்துக்கு வந்த அனைவருக்கும் விதைப்பந்து பரிசாக அளிக்கப்பட்டது. மேலும் திருமண விழாவில், தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், பறையாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்