'ஒரு வழியா கெடச்சிட்டு...' '42 வருஷம் முன்னால திருட்டு போனது...' இவ்வளவு வருசத்துல சிலைகள் போய் சேர்த்திருக்க 'இடம்' ரொம்ப தூரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நாகை மாவட்டத்தில் 42 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிலைகள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.

நாகப்பட்டினம் மாவட்டம் பொறையார் ஆனந்தமங்கலம் கோயிலில், 1978-ம் ஆண்டு ராமர், சீதை, லட்சுமணன் ஆகிய மூன்று ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டு இருந்தன. அந்த சிலைகள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சிலைகள் சுமார் 42 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் மீட்கப்பட்டன. இங்கிலாந்தில் மீட்கப்பட்டுள்ள நாகை கோயில் ஐம்பொன் சிலைகள் இன்று (18-11-2020) டெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது.

டெல்லி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் சிலைகளை தமிழகம் கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்