மு.க.ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் எதிர்த்து போட்டியா? சீமான் ‘அதிரடி’ பதில்.. பரபரக்கும் தேர்தல் களம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு சீமான் பதிலளித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திப்பதற்கான ஆளும் கட்சியான அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுக உட்பட பல கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இதில் அதிமுக, தேர்தல் பணி குறித்து நாளை அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளது.

இந்தநிலையில் வ.உ.சிதம்பரனாரின் 84ம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மலர்வணக்கம் செலுத்தினார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்திந்தார். அப்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவீர்களாக? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிரித்துக்கொண்டே பின்னால் நின்ற கட்சியினரை பார்க்க, அவர்கள் அண்ணே நீங்க நில்லுங்க என்று சொல்லவும், ‘நிக்காலாம்னு எல்லோரும் நினைக்கிறாங்க. நானும் அதையே நினைக்கிறேன். அத அப்புறம் யோசிப்போம்’ என சீமான் பதிலளித்தார்.

மேலும், பாஜக துணைத்தலைவர் அண்ணாமலை திடீரென வந்து இயற்கை விவசாயம் செய்யவேண்டும். ஆடு, மாடுகளை வளர்க்க வேண்டும் என சொல்கிறார். இதைதான் நாங்கள் 10 வருடங்களாக சொல்லி வருகிறோம் என சீமான் தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் ஆண், 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை சீமான் களமிறக்கினார். அந்த தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் 5000-க்கும் மேற்பட்ட வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றது.  நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஒரு ஒன்றிய கவுன்சிலர் இடத்தையும் நாம் தமிழர் கட்சி கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்