'சென்னையில்' காணாமல் போன 'பைக்'குக்கு... 'திருநெல்வேலி'யில் அபராதம் விதித்த 'போலீசார்'... 'விசாரணையில்' வெளியான 'திடுக்கிடும்' தகவல்...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் விலை உயர்ந்த இருச்சக்கர வாகனங்களைத் திருடி வெளி மாவட்டங்களில் விற்பனை செய்து வந்த மர்மநபர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சூளைமேடு பகுதியில் வசித்து வரும் கபிலன் என்பவர், கடந்த ஜனவரி மாதம் 19-ஆம் தேதி தனது இருசக்கர வாகனமான ராயல் என்ஃபீல்டு பைக்கை காணவில்லை என சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறிச் சென்றதாக கூறி அவரது வாகனத்திற்கு ஆயிரம் ரூபாய அபராதம் கட்டுமாறு அவரது செல்ஃபோனுக்கு எஸ்.எம்.எஸ் ஒன்று வந்தள்ளது. அதிர்ச்சியடைந்த கபிலன் உடனடியாக சூளைமேடு காவல் நிலையத்திற்கு சென்று குறுஞ்செய்தியை காட்டி விபரத்தை கூறி உள்ளார்.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த குறுஞ்செய்தி நெல்லை மாவட்டம், களக்காடு போலீசாரால் அனுப்பப்பட்டது என்பதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து விவரங்களைக் கூறி நெல்லை போலீசாரை விசாரிக்குமாறு கேட்Lக் கொண்டனர். இதையடுத்து, விசாரணையில், பைக்கை ஓட்டி வந்தது நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கொம்பையா என்பதும், அவர் வாகனங்கள் திருடும்  கும்பலைச் சேர்ந்தவர் என்பதும்  தெரியவந்தது.

இதையடுத்து திருநெல்வேலி சென்ற சூளைமேடு தனிப்படை போலீசார் கொம்பையாவிடம் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்தன. சென்னையில் திருடப்பட்ட வாகனங்களை பிற மாநிலங்களிலும், பிற மாநிலங்களில் திருடப்படும் வாகனங்களை சென்னையிலும் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த திருட்டு சம்பவத்தில் மேலும் 5 பேருக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. கொம்பையாவிடமிருந்து  6 என்பீல்டு பைக்குகள், 6 விலை உயர்ந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கொம்பையாவின் கூட்டாளிகளைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

CHENNAI, THIRUNELVELI, BIKE, STEALING TWO WHEELERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்