‘மகள் கல்யாணத்துக்காக சேர்த்து வச்சது’.. ‘இப்படி பண்ணிட்டாங்களே’.. கதறி அழுத தாய்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மகளின் திருமணத்துக்காக வீட்டில் வைத்திருந்த நகைகள் திருடுபோனதைக் கண்டு தாய் கதறி அழுத சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த விளநகர் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார். இவர் வெளிநாட்டில் பொறியாளராக வேலை பார்த்து வரும் நிலையில் அவரது மனைவி ராஜேஷ்வரி தனது இரண்டு மகள்களுடன் தனியே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று உறவினர் ஒருவரது வீட்டுக்குச் செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு மூவரும் சென்றுள்ளனர்.
இதனை அடுத்து காலை வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜேஷ்வரி உடனே வீட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த 100 சவரன் நகை மற்றும் 8 லட்சம் ரூபாய் பணம் திருட்டுப் போயுள்ளது தெரியவந்துள்ளது. மூத்த மகளின் திருமணத்துக்காக வங்கியில் இருந்து எடுத்துவந்த பணம் மற்றும் நகைகள் திருடுபோய்விட்டதே எனக் கூறி தாய் ராஜேஷ்வரி கதறி அழுதார். இந்த நிலையில் கொள்ளை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- VIDEO: 'ஓடியாங்க, நாம எல்லாருமே பணக்காரங்க ஆக போறோம்...' 'ஒரு கிராமமே வந்து குவிஞ்சிட்டாங்க...' 'அவங்க கேள்விப்பட்ட விஷயம் அப்படி...' - வைரல் வீடியோ...!
- ‘பயத்துல ஒளிச்சு வச்சிட்டேன்’.. சோதனையின்போது நைசாக நழுவிய பயணி.. சென்னை விமான நிலையத்தில் சிக்கிய இளைஞர்..!
- ஐயையோ...! 'எனக்கு லாட்டரி அடிச்சிடுச்சே...' 'ஒருவேளை அப்படி நடந்துட்டா...' 'திடீர்னு தோன்றிய பயம்...' - அவசர அவசரமாக எடுத்த முடிவு...!
- 'இது என் மொத்த உழைப்பு...' 'ஆனாலும் வேற வழி இல்ல...' 'ஒரு தொழில் பண்ண என்ன பாடு பட வேண்டியது இருக்கு...' - அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சலூன் கடைக்காரர்...!
- 'என் தங்கச்சி வேற ஒருத்தர லவ் பண்றா...' 'நீங்க இன்னொரு பொண்ண பாருங்களேன்...' 'கொடுத்த வாக்குறுதி...' 'மோசடி' வேலையில் ஈடுபட்ட 'மாமன்'.. அம்பலமான 'அதிர்ச்சி' பிளான்!!
- ‘நாட்டு துப்பாக்கி, வெல்டிங் மெஷின்’.. ‘திருட்டு டாடா சுமோ’.. திருப்பூர் ஏடிஎம் கொள்ளையில் வெளியான பரபரப்பு தகவல்..!
- '52 வயசாகியும் கல்யாணம் ஆகல...' 'செல்போனுக்கு வந்த ஒரு போன்கால்...' 'நான் சொல்றத பண்ணீங்கன்னா 35 வயசுல ஒரு பொண்ணு கெடைக்கும்...' - தலையில் மிளகாய் அரைத்த கும்பல்...!
- ‘வீட்டுக்குள் இருந்த சுரங்கப்பாதை’!.. 3 பெரிய பெட்டியில் ‘வெள்ளிக்கட்டி’.. டாக்டரை அதிரவைத்த சம்பவம்..!
- 'யாருக்கும் டவுட் வராம...' 'கச்சிதமா காரியத்தை முடிச்சிட்டு இருந்த எடத்துல வச்சிடுவார்...' - ஒரு வருசமா தொடர்ச்சியா நடந்திருக்கு...!
- 'பார்க்க டிப் டாப் லுக், சொகுசு கார்'... 'கொஞ்சம் இந்த அட்ரஸ் மட்டும் சொல்லுங்க'... திருப்பூரை அதிரவைத்த 3 இளைஞர்கள்!