"வீட்டுக்குள் வெள்ளம்.. வாசலில் தேங்கிய மழைநீர்".. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் வெளியிட்ட வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கடந்த 29 ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தற்போது பருவமழை பெய்துவருகிறது.தென்மேற்கு வங்கக்கடலை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது வலுவடைந்து தமிழ்நாடு, புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என தெரிகிறது.
நாளை (13.11.2022) வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னையிலும் நல்ல மழை பெய்துவருகிறது. பலத்த காற்றுடன் மழை பெய்துவரும் நிலையில், வங்கக் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.
இந்நிலையில், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "என் வீட்டு வாசலில் 2 அடி அளவு வெள்ளம் தேங்கி நிற்கிறது. மேலும், வெள்ளம் வீட்டிற்குள் புகுந்து 3 மணிநேரம் ஆகி விட்டது. நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறீர்களா?" என ஒரு வீடியோவை வெளியிட்டு ட்வீட் செய்துள்ளார்.
இந்த பதிவிற்கு சென்னை மாநகராட்சி தனது ட்விட்டர் பக்கம் மூலம் "உங்கள் முகவரியை அனுப்புங்கள். நடவடிக்கை எடுக்கிறோம்" என பதில் அளித்துள்ளது.. சென்னை மாநகராட்சியின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த சந்தோஷ் நாராயணன், "சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு என் வீட்டு முகவரியை அனுப்பியுள்ளேன். ஊழியர்கள் வரும் போது பாதுகாப்பாக வரச்சொல்லுங்கள், இந்த பகுதியில் பெரிய பள்ளங்கள் & தண்ணீர் பாம்புகள் உள்ளன. வெள்ளம் வடிந்ததும் இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்" என சந்தோஷ் நாராயணன் ட்விட் செய்துள்ளார்.
மற்ற செய்திகள்
"நான்காண்டு தாமதம்".. "உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒரு படிப்பினை".. அறுவர் விடுதலையில் கமல்ஹாசன் கருத்து!
தொடர்புடைய செய்திகள்
- கும்மிருட்டில் சென்னை.. தமிழகம் முழுவதும் தட்டி வீசும் மழை.. அடுத்த 3 மணி நேரத்துக்கு இப்படித்தானாம்.!
- "இதெல்லாம் ட்ரெய்லர் தான்".. தட்டி வீசப்போகும் கனமழை.. தமிழ்நாடு வெதர்மேன் கொடுத்த வார்னிங் . இந்த இடங்கள் தான் ஹாட்ஸ்பாட்..!😱
- "துணி காய வச்சிருக்கீங்களா?".. வித்தியாசமாக மழை அப்டேட் கொடுத்த வெதர்மேன்..!
- ப்பா...நூறு ஆயுசு.. மழையால் முறிந்து விழுந்த மரம்.. நூலிழையில் தப்பித்த வாகன ஒட்டி.. திக்..திக்.. வீடியோ..!
- மேகம் கருக்குது.. கொட்டித் தீர்த்த மழை.. குஷியாக கொண்டாடிய போதை ஆசாமி.. இணையத்தில் வைரலாகும் வீடியோ..!
- கனமழை எதிரொலி.. 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.. இந்தப் பகுதி மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம்.. எச்சரித்த வெதர்மேன்..!
- 2 நாளைக்கு தட்டி வீசப்போகுது மழை.. இந்த இடங்கள்லாம் மிக கனமழை இருக்கும்.. வெதர்மேன் கொடுத்த வார்னிங்..
- வெளுத்துவாங்கப்போகும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு இப்படித்தான்.. 18 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வுமையம் கொடுத்த வார்னிங்..!
- பாகிஸ்தானில் கொட்டித்தீர்த்த வரலாறுகாணாத மழை.. வெளியான சாட்டிலைட் புகைப்படங்கள்.. உறைந்துபோன உலக நாடுகள்..!
- வரலாறு காணாத பேய்மழை.. "3 ல ஒருபங்கு நிலம் தண்ணில இருக்கு".. பாகிஸ்தான் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பால் அதிர்ந்துபோன மக்கள்..!