"'ஆர்டர்' பண்ணது 'ஆப்பிள்' வாட்ச்... ஆனா அதுக்கு பதிலா வந்தது,,." 'அதிர்ச்சி'யில் உறைந்த 'பிரபல' இசையமைப்பாளர்,,.. 'கடும்' கோபத்துடன் போட்ட 'ட்வீட்'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான பிளிப்கார்ட் (Flipkart) மூலம் உலகளவில் அதிகளவிலான மக்கள் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர்.

இந்தியாவிலும், பிளிப்கார்ட் மூலம் பொருட்களை வாங்குபவர்களின் சதவீதம் அதிகமுள்ள நிலையில், பிரபல இசையமைப்பாளர் சாம் சி.எஸ் (Sam CS), அவருடைய சகோதரனுக்கு பிளிப்கார்ட் மூலம் ஆப்பிள் வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்து அனுப்பியிருந்தார். ஆனால், ஆப்பிள் வாட்சுக்கு பதிலாக, ஒரு பெட்டிக்குள் வெறும் கற்கள் மட்டும் அவரது சகோதரருக்கு கிடைத்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த சாம் சி.எஸ், இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் இட்டுள்ளார். அதில், 'எனது சகோதரருக்கு வேண்டி ஆப்பிள் வாட்ச் ஒன்றை பிளிப்கார்ட் மூலம் ஆர்டர் செய்தேன். ஆனால், ஆப்பிள் வாட்சுக்கு பதிலாக கற்கள் இருப்பதை அறிந்து நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இதுகுறித்து புகாரளிக்க பிளிப்கார்ட் நிறுவனத்தை தொடர்பு கொண்ட போது, எங்களது புகாரை நிராகரித்து பணத்தை திருப்பி அனுப்பவும் மறுத்தனர்' என குறிப்பிட்டுள்ளார். இதனைக் கண்ட அவரது ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, பிளிப்கார்ட் நிறுவனத்தின் 'Flipkart Support' என்ற ட்விட்டர் பக்கத்தில் இருந்து, அவரின் டிவீட்டிற்கு மன்னிப்பு கேட்கப்பட்டது. தொடர்ந்து, தங்களது ஆர்டர் தொடர்பான விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. 

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்