“பொங்கலுக்கு கரும்போட வந்துருங்க!”.. கொலைக் குற்றவாளியை பிடிக்க போலீஸார் போட்ட “வேற லெவல்” ஸ்கெட்ச்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதுக்கோட்டையைச் சேர்ந்த சரண்யாவுக்கும் ராஜாவுக்கும் திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். இவர்களின் குழந்தை தாயுடன் இருக்க வேண்டுமென கோர்ட் உத்தரவு பிறப்பித்திருந்தது. எனினும் வார இறுதியில் குழந்தையை அழைத்துவந்து ராஜாவிடம் காண்பித்து வந்த சரண்யா, ஒருவாரம் காணாமல் போனார்.

சில நாட்கள் கழித்து தூர்ந்த கிணறு ஒன்றில் எலும்புக்கூடாக சரண்யாவின் பிரேதம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர் வழக்கு க்ரைம் பிராஞ்ச்க்கு மாறியது. அதன்பின் சரண்யா, ராஜா உள்ளிட்டோரின் போன்களை ட்ரேஸ் செய்த போலீஸார் ரகுவரன் என்கிற புதிய நபரின் போன் அழைப்புகளை கண்டனர். கண்காணித்தனர். ஆனால் அவர் மலேசியாவில் இருப்பது தெரியவரவே, அவரது உறவினர்கள் மூலம் பொங்கல் பண்டிக்கைக்காக ஊருக்கு வருமாறு அழைக்கப்பட்டார்.

அதை நம்பி கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்தவுடனேயே, அவரை விமான நிலையத்தில் காத்திருந்த போலீஸார், பொறிவைத்து அவரைப் பிடித்தனர். அதன் பின்னர் கடுமையாக விசாரித்தனர்.  அப்போது ஜூலை 16, 2017-ல் காணாமல் போனதாக புகார் எழுந்த சரண்யா (27) என்கிற பெண்ணை சரண்யாவின் கணவர் தூண்டுதலின் பேரில், தனது நண்பர்களுடன் சேர்ந்து கொன்றதாக ரகுவரன் ஒப்புக்கொண்டார்.

PONGAL, MURDER, HUSBANDANDWIFE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்