‘அண்ணன் கேட்ட ஒரு கேள்வி’.. ஆத்திரத்தில் கொன்று வீட்டிற்குள் புதைத்த தம்பி!.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அண்ணியுடன் தகாத உறவில் இருந்த தம்பியை தட்டிக்கேட்ட அண்ணை கொன்று வீட்டிற்குள் புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டத்தில் உள்ள கூழையாறு கிராமத்தை சேர்ந்த முருகதாசன் என்பவருக்கு, கடலூர் மாவட்டத்தில் உள்ள சி.புதுக்குப்பம் பகுதியை சேர்ந்த சுமிதா என்பவருடன் கடந்த 2001 -ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இதனை அடுத்து இருவரும் கடலூர் துறைமுகம் அருகே உள்ள சிங்காரத்தோப்பில் 2 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் முருகதாசன் வேலைக்காக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். இதனால் முருகதாசனின் தம்பி சுமேர் என்பவர் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த சுமிதாவுக்கு உதவிகள் செய்து வந்துள்ளார். இது நாளைடைவில் தகாத உறவில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே கடந்த 2013 -ம் ஆண்டு முருகதாசன் நாடு திரும்பியுள்ளார். இதனை அடுத்த சில நாட்களில் முருகதாசன் காணமல் போயுள்ளார். இதனால் முருகதாசன் மீண்டும் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டதாக உறவினர்கள் நம்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சுமிதாவும், சுமேரும் திடீரென காணமல் போயுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த முருகதாசனின் தாயார் அவரது பாஸ்போர்ட் வீட்டில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை அடுத்து தனது மகன் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் நடத்திய தீவிர விசாரணையில் சுமிதாவும், சுமேரும் கேரளாவில் இருந்ததை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில், அண்ணியுடன் தகாத உறவில் இருந்தது குறித்து கேட்டாதால் முருகதாசனை கொன்று வீட்டிற்குள் புதைத்தாக தெரிவித்துள்ளார். இதனால் இவர்கள் இருவரின் மீதும் வழக்கு பதிவு செய்த போலிஸார் தீவிர விசாரனை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இளம்பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பம்'... 'இளைஞரின் அதிர்ச்சி செயல்'!
- 'மொதல்ல சொன்னேன்.. அப்றம்தான்'.. தமிழகத்தையே நடுங்க வைக்கும் 'இன்னொரு' ஆணவக்கொலை!
- '8 மாத கர்ப்பிணி'ன்னு கூட பாக்காம'...'இப்படி பண்ணிட்டாங்களே'... 'உறைந்து நின்ற காவல்துறையினர்'!
- 'திட்டம் போட்டோம் .. 'பயிற்சி செஞ்சோம்' .. 'கொன்னோம்' .. அதிரவைக்கும் வாக்குமூலம்!
- 'அதிர்ச்சியில் உறைந்த சென்னை'... '4 வயது 'சிறுமி'க்கு நேர்ந்த கொடூரம்'... 'கழிவறை வாளி'க்குள் சடலம்!
- 'பால்' குடின்னு சொன்னா'... 'கேக்க மாட்டியா'?... 'வளர்ப்பு தந்தை' செய்த கொடூரம்!
- 'சொல்லி பாத்தேன் கேக்கல'... 'தம்பி'யை கொடூரமாக கொன்ற 'அண்ணன்' ... அதிரவைக்கும் காரணம் !
- 'நண்பனை கொடூரமாகக் கொன்று'... 'தற்கொலை நாடகமாடிய கும்பல்'!
- ‘9 மாத குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொலை’... ‘சைக்கோ இளைஞரின் பகீர் வாக்குமூலம்'!
- 'கர்ப்பிணி மனைவியை கழுத்தறுத்து கொன்று'... 'கணவர் செய்த அதிர்ச்சி காரியம்'!