'முரசொலி வைத்திருந்தால் என்ன பொருள் தெரியுமா'?... 'ரஜினிகாந்திற்கு முரசொலியின் பரபரப்பு பதிலடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

துக்ளக் விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், முரசொலியை படிப்பவர்கள் திமுககாரர்கள் என்றும், துக்ளக் பத்திரிகையை படிப்பவர்கள் அறிவாளிகள் எனவும் பேசியிருந்தார். நடிகர் ரஜினியின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமூகவலைத்தளங்களிலும் இது பெரும் விவாத பொருளாக மாறியது.

நடிகர் ரஜினியின் பேச்சை பலர் ஆதரித்தும், எதிர்த்தும் வந்தார்கள். இந்நிலையில் முரசொலி நாளிதழில் ரஜினிகாந்தின் பேச்சுக்கு பதிலடி தரும் வகையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ''முரசொலி வைத்திருந்தால் தமிழன் என்று பொருள் எனவும், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற பேதமற்ற உன்னத கோட்பாட்டை ஏற்றுக் கொண்டவன் என்று பொருள் எனவும் அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் முரசொலி வைத்திருந்தால் தமிழ் காப்போன் எனவும், தமிழர் நலன் காப்போன் என்று பொருள்படும் எனவும் அதில் சுட்டிக்காட்டியுள்ளது. முரசொலியை நீங்கள் வைத்திருந்தால் மனிதன் என்று பொருள் படும் எனவும்  முரசொலி வைத்திருந்தால் ஒரு பொன்னுலகு உருவாக்கும் போராட்டத்தில் தன் பெயரை இணைத்துவிட்ட உடன்பிறப்பு என்று பொருள் எனவும் விளக்கமளித்துள்ளது.

RAJINIKANTH, DMK, MURASOLI, THUGLAK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்