'வழக்கமா ப்ராக்ரஸ் ரிப்போர்ட்ல தானே அப்பா கையெழுத்தை போடுவீங்க'... 'ஆனா இந்த மகன் செய்த வேலை'... அதிர்ந்து நின்ற தந்தை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பள்ளி காலங்களில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்து விட்டால், அப்பா திட்டுவார் அல்லது அடிப்பார் என்ற பயத்தில் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்ல் தந்தையின் கையெழுத்தைப் பலர் போட்டிருப்பார்கள். பின்னொரு காலத்தில் அதை நினைத்து பலரும் சிரித்திருப்பார்கள். ஆனால் இந்த இளைஞர் செய்த செயலால் அவரது தந்தை காவல்நிலையத்திற்கே சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த வணிகர் ஹஸ்திமல் ஜெயின். இவர் வணிக வளாகத்தில் இருக்கும் தனது கடைகளைப் பார்வையிடச் சென்றுள்ளார். அப்போது அந்த 3 கடைகளும் மூடப்பட்டுக் கிடந்துள்ளது. இதைப் பார்த்த  ஹஸ்திமலுக்கு தூக்கி வாரிப் போட்டுள்ளது. உடனே தனது மகன் பிரமோத்திடம் என்ன நடந்தது என விசாரித்துள்ளார். அப்போது அவர் கடைகளின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டதால், அவரால் பராமரிப்பு செலவு செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் வியாபாரத்தில் தனக்கு இழப்பு ஏற்பட்டதாக பிரமோத் கூறியதுடன், ரூ .2.5 கோடி மதிப்புள்ள சொத்தின் மீது கடன் வாங்கியதாகவும் கூறினார். இதையெல்லாம் கேட்ட ஹஸ்திமலுக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னுடைய மகனா இப்படி தனது தொழிலை அதலபாதாளத்திற்குக் கொண்டு சென்று உள்ளார் என அதிர்ச்சியில் உறைந்து நின்றார். அப்போது மேலும் ஒரு நிகழ்வு அவரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது.

அதாவது ஹஸ்திமல் வங்கி ஆவணங்களைச் சோதனை செய்தபோது, தனது கையொப்பத்தை மோசடியாகப் பதிவிட்டு  ஹஸ்திமலின் பெயரில் கடன் வாங்கியது வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து காவல்நிலையம் சென்ற ஹஸ்திமல் தான் மோசடி செய்யப்பட்டது குறித்து புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ''இந்த கடன் 2019 ஆகஸ்ட் கடைசி வாரத்தில் வாங்கப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த நேரத்தில், ஹஸ்திமல் ஒரு மத விழாவில் கலந்து கொள்வதற்காக ராஜஸ்தான் சென்று செப்டம்பர் மாதம்தான் ஊர் திரும்பினார்.

புகாரை விசாரித்த பின்னர், மோசடி செய்ததற்காக இந்தியத் தண்டனை சட்டப்பிரிவின் கீழ் குற்றத்தைப் பதிவு செய்துள்ளோம், இந்த வழக்கில் யாரும் கைது செய்யப்படவில்லை, தற்போது விசாரணை நடந்து வருகிறது" என்று போரிவாலி காவல் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

தந்தையின் கையெழுத்தைப் போட்டு, மகனே தந்தையை மோசடி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்