“எங்க போனீங்க மார்க்? எனக்கு பசிக்குது!” - அன்பு நண்பர் இறந்ததை அறியாத காட்டு யானை.. தினமும் ஏக்கத்துடன் ரிசார்ட்டுக்கு வந்த நெகிழ்ச்சி சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

முதுமலை அருகே சீகூர் என்ற கிராமத்துக்குள் தும்பிக்கையில் காயம்பட்ட நிலையில் காட்டு யானை  உலவி வந்தது.

இந்த காட்டு யானை தமது ரிசார்ட் அருகே வந்ததை மார்க் கண்டு அதிர்ந்துள்ளார். யானையின் தும்பிக்கையில் பெரிய காயம் இருந்ததை கண்ட அவர், யானையால் சரியாக உணவு உட்கொள்ள  முடியவில்லை என்பதை பார்த்ததும் கண்கலங்கினார்.  யானையின் தும்பிக்கையின் முன் பகுதி பன்றியைப் பிடிக்க வைத்த பொறியில் சிக்கியதால் துண்டாகியது. இந்த நிலையில் தான் தமது ரிசார்ட்டுக்கு வந்த காட்டு யானையைக் கண்டு சற்றும் பயப்படாத மார்க் மயங்கிய நிலையிலிருந்த யானைக்கு உணவு வழங்கி, அதன் காயத்துக்கு மருந்தும் போட்டார்.

காயம் சரியான பின்னரும் யானையால் உணவை தும்பிக்கையால் சரிவர சாப்பிட முடியாததால், அவ்வப்போது அந்த யானை மார்க்கை தேடி ரிசார்ட்டுக்கு வரும். மார்க்கும், தன் கையால் யானைக்கு உணவுகளை வழங்கி, தனக்கு பிடித்த கால்பந்து வீரர்  ரிவல்டோவின் பெயரை வைத்து அழைத்து அதன் தந்தங்களை பிடித்து விளையாடும் அளவுக்கு அதனுடன் நெருக்கமானார் மார்க்.

நாளடைவில், மசினகுடி, கக்கனல்லா பகுதிகளில் இருக்கும் அத்தனை மக்களுக்கும் ரிவல்டோ பிரபலமான யானையாகவே மாறிவிட்டது. இந்த நிலையில் தான் திடீரென உடல்நலக்குறைவால் மார்க் இறந்துவிட, தமது அன்பு நண்பர் மார்க் இறந்த செய்தியை அறியாத ரிவல்டோ யானை தினமும் ரிசார்ட்டுக்கு வந்து மார்க்கினை தேடிப்பார்த்துவிட்டு ஏக்கத்துடன் திரும்பிச் சென்றுகொண்டிருந்தது.

ALSO READ: விவசாயிகள் போராட்டத்தை சர்வதேச கவனத்துக்கு கொண்டு போன பிரபலங்கள்! .. அடுத்த ‘சில மணி நேரத்திலேயே’ விளக்கம் அளித்து வெளியுறவுத்துறை ட்வீட்!

இதனைக் கண்டு மார்க்கின் நண்பர்கள் வேதனை அடைந்தனர். மார்க்கின் மறைவுக்கு பின்னர் வன ஊழியர்கள் ரிவல்டோவுக்கு அவ்வப்போது பழங்கள் வழங்கி பராமரித்து வந்தனர். இந்த நிலையில், ரிவல்டோ முதுமலை தெப்பக்காட்டு முகாமில் வைத்து பராமரிக்கப்படவிருக்கிறது. ரிவல்டோவை அங்கு அழைத்துச் செல்லும் பணிகளில் வன ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்