சென்னை: மெட்ரோ ரயில் பணியில் இருந்த கிரேன் மோதியதால் சேதமான மாநகர பேருந்து.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் மெட்ரோ ரயில் கட்டுமான பணி நடந்து கொண்டு வந்திருக்கிறது. இதன் காரணமாக ஆற்காடு ரோட்டில் வடபழனி முதல் போரூர் வரை சில இடங்களில் ஒரு வழி பாதை பயணம் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
இப்படி சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. சில நேரங்களில் பகலில் வாகன போக்குவரத்துக்கள் அதிகம் இருப்பதால் இரவு நேரங்களில் ஊழியர்கள் கண்விழித்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவற்றில் பணிக்காக ராட்சத கிரேன்கள் பயன்படுத்தப்படுவது உண்டு. இந்த நிலையில்தான், சென்னை வடபழனியில் கிரேன் ஒன்று மாநகரப் பேருந்து மீது விழுந்ததை அடுத்து மாநகர பேருந்து சேதத்துக்குள்ளாகிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
டிசம்பர் 2-ஆம் தேதி (இன்று) காலை 5 மணி அளவில் சென்னை வடபழனி பணிமனையில் இருந்து 159 ஏ என்கிற பேருந்து கோயம்பேடை நோக்கி சென்றபோதுதான் இந்த விபத்து நடந்திருக்கிறது. வடபழனியில் மெட்ரோ பணிகள் நடந்து கொண்டிருக்கும் பகுதி வழியாக இந்த பேருந்து செல்ல, அப்போது மெட்ரோ பணியில் ஈடுபட்டிருந்த கிரேன் ஒன்று எதிர்பாராத விதமாக பேருந்தின் மீது மோதியதால் பேருந்தின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்திருக்கிறது.
நல்ல வேளையாக, பயணிகள் யாரும் இந்த பேருந்தில் பயணிக்கவில்லை, ஓட்டுநர் பழனி சிறிய காயத்துடன் உயிர் தப்பி இருக்கிறார். இந்த விபத்து சம்பவம் குறித்து வடபழனி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இறந்துட்டாருன்னு திதி கொடுத்த குடும்பம்.. 25 வருசம் கழிச்சு தெரிய வந்த உண்மை.. இன்ப அதிர்ச்சியில் குடும்பத்தினர்!!
- ரூ.786 கோடி நஷ்டம் ? அம்மா உணவகம் மூடப்படுகிறதா..? சென்னை மேயர் பிரியா சொல்வது என்ன.?
- இந்த சம்பவம் நிறய நடந்திருக்கு.. ஆனா இதான் ஃபர்ஸ்ட் டைம்.. திருடிய வீட்டின் உரிமையாளரிடமே தப்பிக்க லிஃப்ட் கேட்ட திருடர்.!
- மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் 16வது பட்டமளிப்பு விழா..!!
- ஆண் நண்பருடன் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. வீட்டுக்கு திரும்பிய அம்மாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
- புனே நெடுஞ்சாலை விபத்தை தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய ஒடிசா ரயில் விபத்து.. என்ன நடந்தது?
- கணவருக்கு கண்ணை கட்டி விட்டு பீச்சில் கண்ணாமூச்சி.. அடுத்தடுத்து மனைவி செய்த கொடுமை.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!!
- மாசத்துக்கு ஒரு திருட்டு.. கொள்ளையடித்த பணம், நகை கொண்டு ஆதரவற்றோருக்கு உதவிய நபர்.. சென்னை கொள்ளையனின் பின்னணி!!
- நேருக்கு நேர் மோதிய வாகனங்கள்.. கல்யாணமாகி ஒரே வாரத்துல மாப்பிள்ளைக்கு நேர்ந்த துயரம்.. பெரும் சோகத்தில் கிராம மக்கள்..!
- "ஃபீல் பண்ணாதீங்க, மாஸ் என்ட்ரி குடுப்பேன்".. உயிரிழப்பதற்கு முன் மாணவி வைத்த வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்.. மனதை ரணமாக்கும் சோகம்!!