‘டாஸ்மாக்’ திறப்புக்கு தடை விதித்ததால் ஆத்திரம்?.. மர்மநபர்கள் செய்த ‘அட்டூழியம்’.. மதுரையில் அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை அருகே டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மதுக்கடைகளை திறக்க சில கட்டுப்பாடுகளுடன் மத்திய அரசு அனுமதியளித்தது. இதனை அடுத்து சென்னையை தவிர தமிழகத்தில் உள்ள மற்ற மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு நாள்களாக மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
ஆனால் தற்போது மதுக்கடைகள் திறப்பதால் கொரோனா பரவலை அதிகரிக்கும் என பல்வேறு தரப்பில் இருந்து டாஸ்மாக் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு கிளம்பியது. இதனை அடுத்து மதுக்கடைகள் திறக்கப்பட்டதற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு மீது நேற்று நடைபெற்ற விசாரணையை அடுத்து ஊரடங்கு முடியும் வரை மதுபானக்கடைகளை திறக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த மர்ம நபர்கள், மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடினர். இதில் மதுக்கடைக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர். இதனால் மதுபானங்கள் தீப்பற்றாமல் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Breaking: TASMAC மதுக்கடைகளுக்கு 'தடை'... உயர்நீதிமன்றம் 'அதிரடி' உத்தரவு... இனி இப்படி மட்டுமே வாங்க முடியும்!
- மது விற்பனை தொடர்பாக... உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!.. மாநில அரசுகள் பின்பற்றுமா?
- தீபாவளி, பொங்கல் பண்டிகை போல் நேற்று ஒரே நாளில் அசரவைக்கும் மதுவிற்பனை.. வசூல்ல இந்த மாவட்டம் தான் முதல் இடம்..!
- 'போதை இளைஞர்களால் பாதிக்கப்பட்ட பெண் புகார்...' 'டாஸ்மாக் பாதுகாப்பு பணிக்கு சென்றதால்...' 'மாலை வரச் சொன்ன போலீசார்...'
- போதையில் 'வீட்டிற்கு' வந்த தந்தை... மகள் செய்த 'விபரீத' காரியம்!
- தமிழகத்தில் செயல்பட ஆரம்பித்த 'மதுக்கடைகள்'... ஒரே நாளில் 'இத்தனை' கோடி வசூலா?
- ‘44 நாட்கள் கழித்து திறந்தும்’... ‘இந்த ஊர் பக்கம் மட்டும்’... ‘வெறிச்சோடி கிடந்த டாஸ்மாக் கடைகள்’!
- ஊரடங்கால் கிராம மக்கள் பாதிப்பு!.. கோயில் நிர்வாகம் எடுத்த 'அதிரடி' முடிவு!.. மதுரையில் நெகிழ்ச்சி சம்பவம்!
- "2 கி.மீ நீளத்துக்கு குறையாத வரிசை!".. காலை 6 மணி முதலே.. சிறப்பு தரிசனம் போல் காத்திருந்த மதுப்பிரியர்கள்!
- 'தடபுடல் அலங்காரம்'.. 'சிறப்பு பூஜை'.. இந்த ரணகளத்துலயுமா இப்படி? .. டாஸ்மாக் கடை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை!