காவேரி மருத்துவமனையின், இதய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பயனடைந்த ரசிகை கொடுத்த பரிசு..! நெகிழ்ச்சியில் தோனி..
முகப்பு > செய்திகள் > தமிழகம்இதயத்தசைகள் வழக்கத்திற்கு மாறாக வீங்கி அடர்த்தியாவதால் இதயத்தால் உடலின் பிற உறுப்புகளுக்கு இரத்தத்தை பம்ப் செய்வதை கடினமானதாக ஆக்குகிற ஒரு பாதிப்பு நிலையிலேயே கீழ்புற இதய அறைகளுக்கு இடையிலான தசைச்சுவர் விரிவாகி வீங்கி கனமடையும் நோய் (Hypertrophic Obstructive Cardiomyopathy) என அறைக்கப்படுகிறது.
இந்ந நோய் பாதிப்பு உறுதிசைய்யப் பட்ட 35 வயதான ஒரு பெண்ணுக்கு, தமிழ் நாட்டில் பன்முக சிகிச்சை பிரிவுகள் கொண்ட முன்னணி சங்கிலித் தொடர் நிறுவனமான காவேரி மருத்துவமறனகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை காவேரி மருத்துவமனை, இதய உறுப்பு மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது.
வேலூர் அரசு மருத்துவமனையில் சமீபத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் இருந்து உறுப்பு மாற்று சிகிச்சைக்கான இதயம் பெறப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியின் உயிரை காப்பாற்றுவதற்கான இச்செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக வேலூர் அரசு மருத்துவமனையில் இருந்து சென்னையில் உள்ள சென்னை காவேரி மருத்துவமனை வரை தடங்கலற்ற சீரான போக்குவரத்தை உறுதி செய்ய ஒரு பசுமை வழிப்பாதை உருவாக்கப்பட்டது மற்றும் 1 மணி நேரம், 15 நிமிடங்கள் என்ற கால அளவுக்குள் அந்த இதயம் வேலூரிலிருந்து சென்னைக்கு அதிவேகமாக சாலை வழியாக கொண்டுவரப்பட்டது.
இந்தியாவில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் ஆலோசனைக்காக பல்வேறு விஜயங்களை மேற்கொண்டதற்கு பிறகு 2015ஆம் ஆண்டில் காவேரி மருத்துவமனையில் இதயவியல் துறையின் மூத்த மருத்துவரை இப்பெண்மணி சந்தித்தார். அப்பெண்ணின் பாதிப்பு அறிகுறிகள் மோசமடைந்து, இதயத்தின் செயல்பாடு படிப்படியாக குறைந்தபோது, இதயத்தின் முக்கியமான ரத்தத்தை வேண்டும் பிற உறுப்புகளுக்கும் அறை விரிவடைந்தது. இதனால் ரத்தத்தை பம்ப் செய்யும் இதயத்தின் பணி மிக சிரமமானதாக மாறியது. அதன் காரணமாக இதய உறுப்பு மாற்று சிகிச்சையை உடனடியாக மேற்கொள்ளுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இதயம் மற்றும் நுரையீரல் உறுப்பு மாற்று சிகிச்சை குழுவினரை சந்திக்குமாறு, அவருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. உறுப்பு மாற்று சிகிச்சைக்கான காத்திருப்போர் பட்டியலில் இவரது பெயரும் சேர்க்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இவருக்கு பொருத்தமான இதய தானம் அளிப்பவரை கண்டறியும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் மூளைச்சாவு அடைந்த நபரிடம் இருந்து பெறப்பட்ட இதயத்தை இவருக்கு பொருத்தும் சிகிச்சை செயல்முறை சென்னை காவிரி மருத்துவமனையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. அதன் பிறகு தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு அப்பெண்மணி மாற்றப்பட்டார். அதன்பிறகு நிலையான முன்னேற்றம் பெற்றதன் அடிப்படையில் இவருக்கு பொருத்தப்பட்டிருந்த சொருகு குழாய்கள் நீக்கப்பட்டன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் தீவிர ரசிகரான இப்பெண்மணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராகவும் இருக்கிற தோனியின் உருவத்தை ஓவியமாக வரைந்து இருந்தார். இப்படத்தை காவிரி மருத்துவமனைகள் குழுமத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர். மணிகண்டன் செல்வராஜ், எம்.எஸ்.தோனியிடம் வழங்கினார். இதய உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் வழியாக வாழ்க்கையில் இரண்டாவது அத்தியாயத்தைத் தொடங்கி இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தனது தீவிர ரசிகையால் தீட்டப்பட்ட இந்த அழகான உருவப்படத்தை பெறுவதில், தான் அளவற்ற மகிழ்ச்சி அடைவதாக எம்.எஸ்.தோனி நன்றியுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "என் குரு எப்போவுமே சச்சின் தாங்க".. உருக்கமாக பேசிய தல தோனி.. நெகிழ்ந்துபோன ரசிகர்கள்.. தீயாய் பரவும் வீடியோ..!
- சென்னை: புற்றுநோய் விழிப்புணர்வுக்காக காவேரி மருத்துவமனையின் ‘கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டி’..!
- ஒரே லைனில் தோனி சொன்ன விஷயம்.. வேற லெவல் உற்சாகத்தில் CSK ரசிகர்கள்!!..
- சோழர்களாக மாறிய சிஎஸ்கே வீரர்கள்??.. பொன்னியின் செல்வன் மாதிரி ஒரு பேரும் வெச்சிருக்காங்க..
- "அட, இது தான்'ங்க அந்த உற்சாக Announcement".. தோனி உடைத்த சீக்ரெட்.. "தல சொன்னது நிஜமா நடந்துருமா??"
- ஆபத்தான இதயத் துடிப்பு நோய்.. 55 வயது பெண்.. 3 அட்வான்ஸ் உயிர்காக்கும் செயல்முறையில் காவேரி மருத்துவமனை வெற்றி!
- "எவ்ளோ நாள் ஆச்சு இவங்கள இப்டி பாத்து!!.." லண்டனில் மீட் செய்த தல, சின்ன தல.. "கண்ணே பட்டுடும் போல"
- தல தோனிக்கு வாழ்த்து சொன்ன தளபதி ஸ்டாலின்.. ஃபேன்ஸ் மாதிரி ஆவலுடன் இருக்கும் தமிழக முதல்வர்.. வைரல் ட்வீட்
- வீடியோ வெளியிட்டு.. 'தல'ய வாழ்த்திய 'சின்ன தல'.. நெகிழ்ந்து போன ரசிகர்கள்.. வைரலாகும் ட்வீட்!!
- தல தோனிக்கு சிகிச்சை அளிக்கும் நாட்டு வைத்தியர்.. என்னப்பா ஆச்சு?