இன்று நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா.. பரபரப்பான இறுதி கட்டத்தில் இந்திய அணி.. சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளும் தல தோனி..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் நடைபெற்றுவந்த செஸ் ஒலிம்பியாட் தொடர் இன்று நிறைவு பெறுகிறது. இந்த விழாவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மஹேந்திர சிங் தோனி கலந்துகொள்ள இருக்கிறார்.

Advertising
>
Advertising

44வது செஸ் ஒலிம்பியாட்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகின்றன. இந்த போட்டிகளை கடந்த மாதம் 28 ஆம் தேதி இந்திய பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.  இதில் இந்திய அணி 6 அணிகளாக களமிறங்கியுள்ளது. இந்த அணிகளில் மொத்தம் 30 வீரர்கள் இடம்பெற்றிருக்கின்றனர். பிரம்மாண்ட முறையில் நடைபெறும் இந்த போட்டி மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டிகளை காண பல்வேறு இடங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருகிறார்கள்.

கடைசி சுற்று

கடந்த 28 ஆம் தேதி துவங்கி நடைபெற்றுவந்த இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டனர். இந்நிலையில், இன்று இப்போட்டியின் இறுதி சுற்று நடைபெற இருக்கிறது. 11 வது மற்றும் இறுதி சுற்றான இன்றைய ஆட்டத்தில் இந்திய ஏ அணி, அமெரிக்க அணியுடனும், இந்திய ஓபன் பி அணி ஜெர்மனி அணியுடம், இந்திய ஓபன் சி அணி கஜகஸ்தான் அணியுடனுடம் மோத உள்ளது. அதேபோல், புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய மகளிர் ஏ அணி, அமெரிக்கா அணியுடனும், இந்திய மகளிர் பி அணி ஸ்லோவாக்கியா அணியுடனும், இந்திய மகளிர் சி அணி கஜகஸ்தான் அணி உடனும் மோத உள்ளது.

நிறைவு விழா

இதனையடுத்து வெற்றி பெற்ற அணிகளுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று நடைபெறும் நிறைவு விழாவில் பதக்கங்களை வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மஹேந்திர சிங் தோனி சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள இருக்கிறார். அதேபோல, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் ஆர்கடி துவோர்கோவிச், ஆசிய செஸ் கூட்டமைப்பின் தலைவர் கலீஃபா அல் நஹியான், இந்திய அணியின் ஆலோசகர் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.

இதனை முன்னிட்டு பல்வேறு காலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன. இதற்கான ஒத்திகையில் கலைஞர்கள் கடந்த சில நாட்களாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவை காண திரளான மக்கள் கூட்டம் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CHESSOLYMPIAD, MSDHONI, CHENNAI, செஸ் ஒலிம்பியாட், தோனி, சென்னை

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்