'நடு ரோட்டில் 'மாட்டு' வியாபாரிகளுக்கு நேர்ந்த கதி'... பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாட்டு வியாபாரிகளை கட்டி வைத்து 'கோமாதாவுக்கு ஜே' என்று கோஷம் போட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் கண்ட்வா மாவட்டத்தில் உள்ள சன்வாலிகேடா என்ற கிராமத்தில், மாடுகளை மகாராஷ்ட்ரா மாநிலத்திற்கு அனுப்புவதற்காக லாரியில் ஏற்றி கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென அந்த பகுதியை சூழ்ந்த கிராமத்து மக்கள் சுமார் 100 பேர், மாட்டு வியாபாரிகளை சுற்றி வளைத்தனர். இதையடுத்து அவர்களை  கயிற்றினால் கட்டி முட்டி போட வைத்தனர். நடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் அவர்கள் சொல்வதை செய்தார்கள்.

இதையடுத்து அவரவர் காதுகளை பிடித்து கொண்டு 'கோமாதாவுக்கு ஜே' என கோஷம் போடுமாறு மிரட்டல் விடுத்தார்கள். வேறு வழியில்லாமல் அவர்களும் கோஷம் போட்டார்கள். இந்நிலையில் வியாபாரிகளை ஆபாசமாக திட்டிய அந்த கும்பல், 'கோமாதாவுக்கு ஜே' என கோஷம் போட்டவாறு வியாபாரிகளை 2 கிலோ மீட்டர் நடத்தி கொண்டு வந்து காவல்நிலையத்தில் ஓப்படைத்தனர்.

இதையடுத்து அனுமதி இல்லாமல் பசு மாடுகளை கொண்டு செல்ல இருந்ததற்காக, மாட்டு வியாபாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வியாபாரிளை மோசமாக நடந்திய குற்றத்திற்காக கிராம மக்கள் சில பேர் மீதும் வழக்கு பதிவிட்டு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

TWITTER, MADHYA PRADESH, THRASH, GAU MATA KI JAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்