பிரதமர் மோடிக்கே இந்த நிலைமையா? – கொதித்துப் போன ஓபி ரவீந்திரநாத்.. பொளேர் தாக்கு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பஞ்சாபில் நடைபெற இருந்த பேரணியில் பங்கேற்கச் சென்றிருந்த நிலையில் விவசாயிகள் அவரது வாகனத்தை வழிமறித்ததால் தனது பஞ்சாப் பயணத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் டெல்லிக்குத் திரும்பினார் பிரதமர் மோடி.

Advertising
>
Advertising

இதனால் பாஜக தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், ஓ. பன்னீர் செல்வத்தின் மகனும் தேனியின் மக்களவை உறுப்பினருமான ஓபி.ரவீந்திரநாத் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு டிவிட்டரில் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,” பஞ்சாப் மாநிலத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடியின் பயணம் ரத்து செய்யப்பட்டதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். நாட்டின் பிரதமருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மக்களின் பாதுகாப்பை எப்படி பஞ்சாப் அரசு உறுதிசெய்யும் என்று நம்பமுடியும்?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ட்வீட்டை அழித்த ஓபிஆர்

இந்நிலையில் பஞ்சாப் அரசை கடுமையாக விமர்சித்து டிவிட்டரில் வெளியிட்டிருந்த பதிவை என்ன நினைத்தாரோ தெரியவில்லை ஓபி.ரவீந்திரநாத் அடுத்த சில நிமிடங்களிலேயே டெலிட் செய்துள்ளார். இது சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

PMMODI, மோடி, ஓபரவீந்திரநாத், OPRAVEENDRANATH

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்