'திடீரென வாக்குச்சாவடியில் தொற்றிய பரபரப்பு'...'வாக்கு சாவடிக்குள் வந்த ஆம்புலன்ஸ்'... 'பிபிஇ கிட் உடையணிந்து இறங்கிய 'கனிமொழி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாலை 6 மணிமுதல் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கலாம் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

தமிழகத்தில் இன்று 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை வாக்காளர்கள் ஓட்டுப் போடலாம். காலை 7 மணி முதலே அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர்.

கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள், வாக்குச்சாவடிக்கு வரும்போது உடல் வெப்பத்தில் மாறுபாடு ஏற்பட்டு தொற்றுக்கான சந்தேகம் உள்ளவர்கள் ஆகியோருக்கு கடைசி ஒரு மணி நேரத்தில் முழு கவச உடையுடன் வாக்களிக்கச் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகச் சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த சில வாரங்களாகத் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட கனிமொழிக்குக் கடந்த 3ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையிலும், ஆம்புலன்ஸ் மூலம் வந்து சென்னை மயிலாப்பூர் வாக்குச்சாவடியில் தனது வாக்கைப் பதிவுசெய்து ஜனநாயகக் கடமையாற்றினார் கனிமொழி. அதேபோன்று அம்பத்தூர் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலும் பிபிஇ உடை அணிந்துவந்து வாக்களித்தார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்