'இங்க 'ஷாக்' அடிக்குதா இல்லையா'... 'எம்பி' செய்த ஆய்வு ... ஆச்சரியப்பட்ட மக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உயர் அழுத்த மின் கோபுரத்தின் கீழ்,மின் தாக்கம் இருப்பதாக எழுந்த புகாரை அடுத்து எம்பி கணேசமூர்த்தி எம்.பி ஆய்வு செய்தார்.

தமிழகத்திற்கும் பிற மாநிலங்களுக்கும் வட மாநிலங்களில் இருந்து மின்சாரம் கொண்டு வருவதற்காக உயர்அழுத்த மின் கோபுரம் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன.இதற்கு விவசாயிகள் முதற் கொண்டு பொது மக்களிடமும் பலத்த எதிர்ப்பு நிலவுகிறது.அதற்கு விவசாயிகள் கூறிய முக்கிய குற்றசாட்டு,உயர் அழுத்த மின் கோபுரத்தின் அருகில் கூட மின் தாக்கம் இருக்கிறது என்பதாகும்.இதனால் கோபுரத்தின் அருகில் இருந்தால் கூட மின்சாரம் தாக்கி விடுமோ என்ற அச்சம் இருப்பதால் அதன் அருகில் செல்ல பொதுமக்கள் பலரும் பயப்படும் சூழ்நிலை நிலவுகிறது.

இதையடுத்து ஈரோடு தொகுதி எம்.பி கணேசமூர்த்தி,விஜயமங்கலம் அருகே உள்ள மூணான்பள்ளி என்ற இடத்தில் இருந்த உயர் அழுத்த மின் கோபுரத்தின் கிழே நின்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது  மின்தாக்கம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய நினைத்த எம்பி, உடலில் டெஸ்டரை வைத்து சோதித்து பார்த்தார். அப்போது டெஸ்டரில் இருந்த விளக்கு ஒளிர்ந்தது.

இதனிடையே ஆய்வுக்கு பின் பேசிய எம்.பி கணேசமூர்த்தி 'இங்கு நடைபெற்ற ஆய்வு குறித்து நாடாளுமன்றத்தில் பேச இருக்கிறேன்.அதோடு அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய இருக்கிறேன் என கூறினார்.இந்நிலையில் எம்.பி கணேசமூர்த்தி செய்த ஆய்வு அந்த பகுதி மக்களை ஆச்சரியப்பட வைத்தது.

GANESHA MURTHI, MP, HIGH TENSION ELECTRICITY, ERODE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்