"படிக்கணும்னு ஆசை.." - உதவி கேட்டுச் சென்ற மாணவி.. மார்க்ஷீட்டை பாத்துட்டு எம்பி ஆ.ராசா செய்த காரியம்.. நெகிழ்ந்துபோன குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குடும்ப சூழ்நிலையால் கல்வி பயில உதவுமாறு கோரிக்கை வைத்த மாணவிக்கு நீலகிரி எம்பி ஆ.ராசா உதவியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | எலான் மஸ்க்கின் கனவுத் திட்டம்..டெஸ்ட் பண்ணப்போ வெடிச்ச ராக்கெட் பூஸ்டர்.. வைரலாகும் வீடியோ..!

கோவையை அடுத்த காரமடை சத்யா நகரை சேர்ந்தவர் சாலை குமார். கூலித் தொழில் செய்துவரும் இவர் தனது மனைவி வேலம்மாள் மற்றும் மகள் மாரியம்மாள் ஆகியோருடன் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு 12 ஆம் வகுப்பு படித்த மாரியம்மாள், குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரியில் சேர முடியாமல் போயிருக்கிறது. கூலித் தொழிலாளியான குமாரால் தனது மகளை படிக்க வைக்க முடியாததால் நீலகிரி எம்பி ஆ.ராசாவிடம் உதவிகேட்டுள்ளனர்.

விண்ணப்பம்

இந்நிலையில் ஆ.ராசாவை நேரில் சந்தித்து குடும்ப கஷ்டம் காரணமாக தன்னால் கல்லூரியில் சேர முடியவில்லை என்றும், அரசு கல்லூரி ஒன்றில் சேர்த்துவிட்டால் உதவியாக இருக்கும் என மாணவி மாரியம்மாள் தெரிவித்திருக்கிறார். அப்போது, மாணவியின் மதிப்பெண் சான்றிதழை வாங்கி பார்த்த ஆ.ராசா தனியார் கல்லூரியில் நர்சிங் படிக்கிறாயா? என கேட்டுள்ளார். மேலும், 4 ஆண்டுகளுக்கான கல்வி கட்டணம் முழுவதையும் தானே அளிப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இதனால் பெரிதும் மகிழ்ச்சியடைந்த அந்த மாணவி, தன்னுடைய ஆசையும் நர்சிங் படிக்க வேண்டும் என்பதுதான் என்றும், நிச்சயம் படிக்கிறேன் எனவும் கூறியுள்ளார்.

உதவி

இதனை தொடர்ந்து, கோவையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் சேர்வதற்கான உத்தரவை மாணவியின் குடும்பத்தினரை நேரில் வரவழைத்து வழங்கியிருக்கிறார் ஆ.ராசா. மேலும், தற்போது கல்லூரியின் முதலாம் ஆண்டுக்கான கட்டணமான ஒரு லட்ச ரூபாயையும் அவரே செலுத்தியிருக்கிறார். இதனால் நெகிந்துபோன மாணவி மாரியம்மாள் மற்றும் அவரது குடும்பத்தினர் நீலகிரி எம்பியான ஆ.ராசாவிற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்துப் பேசிய குமார்,"15 நாட்களுக்கு முன்னர் எனது மகளின் கல்விக்கு உதவி செய்யம்படி ஆ.ராசா அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தேன். இந்நிலையில், கோவையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படிக்க அவர் உதவி செய்திருக்கிறார். மேலும், 4 ஆண்டுகளுக்கான கட்டணத்தையும் அவரே செலுத்துவதாகவும் கூறியுள்ளார். இந்த உதவியை நான் என்றென்றும் மறக்கமாட்டேன்" என உருக்கமாக தெரிவித்தார்.

Also Read | "30 வருஷமா யாருக்கும் சொல்லல"..மறைக்கப்பட்ட கடந்த கால வாழ்க்கை.. 'ஒலிம்பிக்' தங்கம் வென்ற வீரர் முதல் முறை மனம்திறந்து பேச்சு.!

MP A RAJA, CHEQUE, STUDENT, STUDY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்