நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த காரில் ‘திடீரென பற்றிய தீ’.. ‘நொடியில் மளமளவெனப் பரவியதால் நடந்த பயங்கரம்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று மதியம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சேலத்திலிருந்து தருமபுரி நோக்கி பயணித்த கார் ஒன்றில் தோப்பூர் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீ பற்றியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்த, அதிலிருந்தவர்கள் வேகமாக காரைவிட்டு கீழே இறங்கியுள்ளனர். காரின் முன்பகுதியில் பற்றிய தீயானது நொடியில் கார் முழுவதும் பரவியுள்ளது.
இதைத்தொடர்ந்து தீ விபத்து குறித்து அவர்கள் போலீஸாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த தருமபுரி தீயணைப்பு வீரர்கள் காரில் மேலும் தீ பரவாமல் அணைத்துள்ளனர். காரில் தீ பற்றியதும் கீழே இறங்கியதால் அதில் பயணம் செய்தவர்கள் அனைவரும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர். காரில் தீ பற்றியதற்கான காரணம் குறித்து தோப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘என்னாது ஃபைன் பணம் இவ்ளோவா’... ‘விரக்தி அடைந்த இளைஞர்’... 'செய்த வேலையால்'... ‘நடுரோட்டில் தவித்த போலீஸ்’!
- ‘எல்கேஜி படிக்கும் மகனுக்கு’... ‘புராஜெக்ட் செய்ய உதவியபோது... 'ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம்'
- இருசக்கர வாகனத்தின் மீது ‘தனியார் பேருந்து மோதி கோர விபத்து’.. ஆத்திரத்தில் பொதுமக்கள் ‘பேருந்துக்கு தீ வைத்ததால் பரபரப்பு’..
- ‘தங்கையின் திருமணத்திற்கு’... ‘ஆசையாக சென்ற அண்ணனுக்கு’... 'வழியில் நடந்த கோர சம்பவம்'!
- ‘நொடியில் நடந்த கோர விபத்து’.. ‘ஆம்னி பேருந்தும் லாரியும்’.. ‘நேருக்கு நேர்’ மோதிக் கொண்ட பயங்கரம்..
- சுங்கச் சாவடியில் ‘பெண் ஊழியரிடம்’.. ‘இளைஞர் செய்த அதிர்ச்சிக் காரியம்’.. வைரலாகும் வீடியோ..
- ‘காவல் நிலையத்துக்குள் தீடீரென நுழைந்த’.. ‘கணவன், மனைவி செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘நெஞ்சை உலுக்கும் வீடியோ’..
- இரவு நேர ‘கேளிக்கை விடுதியில்’.. ‘நொடியில் நடந்த பயங்கரம்’.. பெண்கள் உட்பட ‘23 பேர் உடல் கருகி பலியான பரிதாபம்’..
- 'என்ன காப்பாத்து ஹரி'...'ரத்தத்தால் எழுதப்பட்ட வார்த்தைகள்'...'என் மனைவி' எங்க?...அதிரவைக்கும் சம்பவம்!
- ‘வீட்டுக்குள் விளையாடிய குழந்தை’... ‘காணாமல் போனதால் பதறிய குடும்பம்’... 'கடைசியில் நேர்ந்த சோகம்’!