தம்பி நம்ம ஏரியா.. எங்க வந்தீங்க.. திடீரென விசிட் அடித்த காட்டு யானை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சத்தியமங்கலம் சாலை பகுதியில் வழி மறித்து நின்ற ஒற்றை காட்டு யானையால் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அச்சத்திற்கு உள்ளாகினர். மேலும், அமைதியாக கடந்து சென்ற யானையை ஆச்சரியத்தோடு பார்த்து ரசித்தனர்.

Advertising
>
Advertising

நீண்ட நேரமாக எடுக்காத பேருந்து - தட்டிக்கேட்ட பெண்ணைத் தள்ளிவிட்ட டிரைவர் - போராட்டத்தில் குதித்த பொதுமக்கள் !!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள ஆசனூர் செல்லும் சாலையில் ஒற்றை காட்டு யானை சாலையில் வழிமறித்து நின்றதால் சாலையை கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் அச்சத்தோடு, யானை செல்லும் வரை காத்திருந்தனர்.  சிறிது நேரம் கழித்து யானைக் காட்டிற்குள் சென்றது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. அப்போது வனப்பகுதியில் இருந்து சாலையோரம் இன்று தீவனங்கள் உண்பதும் என வாடிக்கையாகி வருகின்ற நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை ஒன்று வெளியேறி சாலையில் குறுக்கே நின்றதால் வாகன ஓட்டிகள் பெரிதும் மாற்றத்திற்கு உள்ளாகி வாகனங்களை இயக்காமல் யானை கடப்பதற்காக காத்திருந்தனர். சிறிது நேரம் சாலையில் உலாவிய காட்டு யானை சிறிது நேரம் கழித்து வனப் பகுதிகளுக்குள் மீண்டும் சென்றது. யாரையும் தாக்காமல், மேலும் அசால்டாக சாலையில் சிறிது நேரம் உலாவிவிட்டு வனப்பகுதிக்குள் சென்ற காட்டிய அணையால் விபரீதம் ஏதும் நடக்காமல் இருந்தது. இருப்பினும் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வாகன ஓட்டிகளும் அச்சத்திற்கு உள்ளாகி விட்டனர். மேலும் ஆசனூர் சாலையானது அடர்ந்த வனப்பகுதிக்குள் காணப்படுவதால் அப்பகுதியை கடக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் எச்சரிக்கையோடு கடக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். வனப்பகுதியிலிருந்து பலமுறை யானைகள் வெளிவருவதும், சாலையைக் கடந்தும் வருவதால் வேகத்தை குறைத்து ஓட்டும்படியும், பிளாஸ்டிக் முதலியவற்றைக் கீழே போடக்கூடாது எனவும், பல எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி யானைகள் கடக்கும் பகுதியிலும் வனத்துறை சார்பில் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவ்வப்போது காட்டு யானைகள் சாலையை கடக்க முற்படுவதால் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சம் நிலவுகிறது.

வனப்பகுதியில் வனத்துறையினர் அறிவுரையின் பேரில் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. யானை என்றால் பலருக்கும் விருப்பமும், அச்சமும் இருக்கும் ஆனால், இந்த யானை பலரையும் கவர்ந்துள்ளது. காட்டு யானை சாலையில் எந்தவித இவர் எதுவுமில்லாமல் அசால்டாக விசிட் செய்தது பல வாகன ஓட்டிகளை கவர்ந்துள்ளது.

சூப்பர் மேன் சார் நீங்க... கிராசிங்கில் சிக்கிய முதியவர்... ஓடும் ரயிலை நிறுத்திய ஓட்டுனர் !

MOTORISTS, SINGLE WILD ELEPHANT, FOREST, SATHYAMANGALAM, காட்டு யானை, சத்தியமங்கலம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்