‘தாய் செய்த பகீர் காரியம்’... ‘குழந்தைகளுக்கு நேர்ந்த கொடூரம்’... ‘3 வருஷத்துக்குப் பின்’... 'நெஞ்சை உலுக்கிய சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

குழந்தைகளுக்கு எலி மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து, கொலை செய்த தாயையும், அவரது ஆண் நண்பரையும் 3 ஆண்டுகளுக்குப் பின் போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த சருகுவலையபட்டியை சேர்ந்தவர் ராகவானந்தம்.  இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவருடைய மனைவி 27 வயதான ரஞ்சிதா. இந்த தம்பதியருக்கு 3 குழந்தைகள் இருந்தன. கடந்த 2016-ம் ஆண்டு வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, எலி மருந்தை சாப்பிட்டதில் குழந்தைகள் பார்கவி, யுவராஜா ஆகியோர் உயிரிழந்தனர். மதுரை தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்ற கிரிபாலன் உயிர் தப்பினான்.

இந்நிலையில் தனது குழந்தைகளுக்கு யாரோ எலி மருந்து தடவிய பிஸ்கட்டுகளை கொடுத்து கொன்றதாக, போலீஸ் நிலையத்தில் தாய் ரஞ்சிதா புகார் கொடுத்தார். அதன்பின்னர் தனது குழந்தைகள் இறந்தது குறித்து அறிந்த ராகவானந்தம் வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தார். அப்போது உயிர் பிழைத்த தனது மகன் கிரிபாலனிடம் நடந்தவற்றை கேட்டுள்ளார். அப்போது, ரஞ்சிதாவும், கல்யாண்குமார் என்பரும் சேர்ந்து எலிமருந்து தடவிய பிஸ்கட்களை சாப்பிட கொடுத்ததாகவும், அந்த பிஸ்கட்டை சாப்பிட்டபோது, கசப்பாக இருந்ததால் கீழே துப்பிவிட்டதால் தான் உயிர் தப்பியதாகவும் கிரிபாலன் கூறியுள்ளான்.

உடனடியாக இதுகுறித்து ராகவானந்தம், புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், மதுரை ஐகோர்ட்டில் ராகவானந்தம் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, சந்தேக மரணம் என்ற அந்த வழக்கை 2017-ம் ஆண்டு, போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்தனர். அதன் பின்பு இந்த வழக்கு தொடர்பாக நடவடிக்கை ஏதும் இல்லாமல் இருந்து வந்தது. இந்நிலையில் தற்போதைய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், உத்தரவின்பேரில், தலைமறைவாக இருந்த ரஞ்சிதா மற்றும் கல்யாண்குமார் ஆகியோரை போலீசார் கடந்த வியாழக்கிழமையன்று கைது செய்தனர்.

அவர்கள் நடத்திய தீவிர விசாரணையில் ரஞ்சிதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கல்யாணகுமாருக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது. குழந்தைகள் இடையூறாக இருந்ததால், இருவரும் திட்டமிட்டு, கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 10-ந் தேதி 3 குழந்தைகளுக்கும் எலிமருந்து தடவிய பிஸ்கட்டுகளை கொடுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதில் ஒரு குழந்தை மட்டும் உயிர்பிழைத்துள்ளது.  3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

MURDERDE, MADURAI, MOTHER, CHILDREN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்