எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர்... மனைவி செய்த காரியம்... மாமியாருக்கு நேர்ந்த பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பொள்ளாச்சி அருகே, கணவரின் குடிப்பழக்கத்தால், மாமியாரை மருமகள் கடித்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எவ்வளவு சொல்லியும் கேட்காத கணவர்... மனைவி செய்த காரியம்... மாமியாருக்கு நேர்ந்த பரிதாபம்!

உடுமலை சாலையில் உள்ள மின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகேஸ்வரி (62). பத்திர எழுத்தராக பணிபுரிந்து வரும் இவருக்கு, சரவணகுமார் (38) என்ற மகன் உள்ளார். சரவணகுமார், கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு சின்னாம் பாளையத்தை சேர்ந்த கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில் சரவணகுமாருக்கு நிரந்தர வேலை எதுவும் இல்லாததால், தனது தாயாரின் வேலையில், அவ்வப்போது அவருக்கு உதவி புரிந்து வந்துள்ளார்.

அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு, குடித்துவிட்டு வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அடிக்கடி இவ்வாறு வந்ததில், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு இருந்து வந்துள்ளது. மனைவி தொடர்ந்து கண்டிக்கும் போதெல்லாம், சரவணகுமார் தனது தாயார் நாகேஸ்வரி வீட்டுக்கு செல்வது வழக்கம். எவ்வளவோ சொல்லியும் கேட்காததால் மருமகள் கல்பனா, மாமியார் நாகேஸ்வரியுடன் வந்து அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மாமியார் - மருமகள் இடையே ஏற்பட்ட தகராறில், மாமியாரை மருமகள் கல்பனா தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாமியார் நாகேஸ்வரி பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை வாபஸ் பெறக் கோரி மருமகள் கல்பனா அடிக்கடி மாமியார் நாகேஸ்வரியை மிரட்டியதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று, மாமியார் நாகேஸ்வரி மின் நகர் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த கல்பனா அவருடன் தகராறில் ஈடுபட்டதுடன், மாமியாரைத் தாக்கி அவரது தலைப் பகுதியில் பயங்கரமாக கடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்ற நாகேஸ்வரிக்கு மருத்துவர்கள் 6 தையல் போட்டுள்ளனர். இது குறித்து மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மருமகள் கல்பனாவை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DAUGHTER, MOTHER, INLAW, INJURED

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்