'75 வயது தாயை செருப்பால் அடித்த மகன், மருமகள்'... 'நூதன தண்டனை கொடுத்த நீதிபதி'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தன்னை பெற்ற தாயை செருப்பால் அடித்த மகனுக்கு, சென்னை உயர்நீதிமன்றம், நூதன தண்டனை வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் சலவன்பேட்டையை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஸ்ரீலதா என்பவர், காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார். அதில் தனது மூத்த மகன் ஸ்ரீதர் (54), மருமகள் காயத்திரி (54), இருவரும், தனது வீட்டுக்கு வந்து சொத்துக்காக சண்டை போட்டதுடன், செருப்பால் அடித்ததாக கூறியிருந்தார். மேலும் மருமகளும், மகனுடன் சேர்ந்து என்னை எட்டி உதைத்து, கொலை மிரட்டல் விடுத்தாகக் கூறியிருந்தார்.

அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஸ்ரீதர் மற்றும் காயத்திரி மீது பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து தங்களுக்கு முன்ஜாமீன் கேட்டு ஸ்ரீதரும், மருமகள் காயத்திரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, இருவருக்கும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கினார். மேலும், ஸ்ரீதர் ‘சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் முதியோர் இல்லத்துக்கு, அக்டோபர் 4-ம் தேதிக்குள் 10 ஆயிரம் ரூபாய் வழங்கவேண்டும் என்றும், 2 வாரம் இருவரும், மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்’ என்றும்  நீதிபதி உத்தரவிட்டார்.

CHENNAI, HIGHCOURT, MOTHER, SON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்